Home /coimbatore /

ரோலர் ஸ்கேட்டிங்கில் கோவையை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லும் மாணவி.!

ரோலர் ஸ்கேட்டிங்கில் கோவையை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லும் மாணவி.!

ரோலர்

ரோலர் ஸ்கேட்டிங்கில் கோவை மாணவியின் சர்வதேச சாதனை..

Coimbatore Roller Skating | கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி அபிநயா ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் சர்வதேச அளவில் முத்திரை பதித்து வருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
கோவையை சேர்ந்த மாணவி ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் சர்வதேச அளவிலான சாதனைகளை படைத்து கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி.   இவரது மகள் அபிநயா. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அபிநயா தனது 10 வயதில் ஸ்கேட்டிங் பயிற்சியை துவங்கினார் . முதலில் மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் இவர் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை பெற்றார். அப்போது முதல் தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார்.

மாணவி அபிநயா


ஸ்பெயினில் சாதனை:

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்ட அபிநயா அனைத்து போட்டிகளிலும் பதக்கங்களை குவித்தார். இதுவரை 120க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளார். இதனிடையே கடந்த 2019ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்ட அபிநயா 4வது இடத்தை பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதையும் படிங்க: நீங்களும் பாடகராகலாம்... பாத்ரூம் சிங்கர்களை மேடை பாடகர்களாக மாற்றி வரும் கோவை நிறுவனம்..

 'சக்சஸ் அபிநயா'

இந்தியாவிலிருந்து ரோலர் ஸ்கேடிங் போட்டியில் பங்கேற்று 4வது இடத்தை பெற்ற முதல் மாணவி இவரே. தற்போது 'சக்சஸ் அபிநயா' என்ற ஸ்கேட்டிங் பயிற்சி பள்ளியை துவங்கியுள்ளார் இந்த மாணவி. இந்த பயிற்சி பள்ளியில் ஸ்கேட்டிங் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ஸ்கேட்டிங் பயிற்சி வழங்கி வருகிறார்.

இதுகுறித்து அபிநயா கூறுகையில்,  "எனது பெற்றோர் மற்றும் சகோதரர் கொடுத்த நம்பிக்கையும், பயிற்சியாளர்கள் அளித்த பயிற்சியும் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. எனது தந்தை மிகவும் சிரமப்பட்டு என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளார். அதனால் ஏழை சிறுவர் சிறுமிகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது கல்லூரி படிப்பு தொடங்கியுள்ளது. இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. ஐ.பி.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற இலக்குடன் பயணிக்கிறேன்." என்றார்.

ஏழ்மை நிலையில் ஸ்கேட்டிங் கற்றுக்கொண்டு சாதனைகள் படைத்ததும் வந்த நிலையை மறக்காமல், தன்னை போன்ற நிலையில் உள்ளவர்களையும் சாதனையாளர்களாக மாற்ற முனைப்பு கொண்டிருக்கும் இந்த மாணவிக்கு பாராட்டுகள்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி