Home /coimbatore /

விளைநிலத்தின் மண் வளத்தை அறிய ரூ.20 - மண்வள அட்டை பெற கோவை விவசாயிகளுக்கு அழைப்பு

விளைநிலத்தின் மண் வளத்தை அறிய ரூ.20 - மண்வள அட்டை பெற கோவை விவசாயிகளுக்கு அழைப்பு

கோவை

கோவை

Coimbatore Soil Testing | கோவை மாவட்ட விவசாயிகள், தங்கள் விவசாய மண்ணின் வளத்தை அறிந்து, மண் வள அட்டை பெற்று பயன் பெறுமாறு வேளாண்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட மண் பரிசோதனை நிலையங்கள் இருக்கின்றன. இங்கு விவசாயிகளுக்கு ஒரு மண் மாதிரிக்கு 20 ரூபாய் கட்டணமாக பெறப்பட்டு, பரிசோதனை முடிவுகள் வழங்கப்படுகின்றன.

இருந்தபோதும், பெரும்பாலான விவசாயிகள் மண் பரிசோதனை செய்துகொள்ளாமல், மண்ணில் இருக்கும் சத்துக்கள் குறித்து அறிந்து கொள்ளாமல் நிலத்தில் சாகுபடி செய்கின்றனர். இதனால், தேவையான அளவில் உரம் உள்ளிட்ட இடுபொருட்களை பயன்படுத்தாமல் நஷ்டம் அடைகின்றனர்.

இதையும் படிங்க ; கோவையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்'... அப்படி என்னங்க இருக்கு? வாங்க பார்க்கலாம்..!

அத்துடன், பயிர்களுக்கு தேவையான சத்துக்களும் கிடைப்பதில்லை. இதை தடுப்பதற்காக, வேளாண்துறையினர் அனைத்து மாவட்டங்களிலும், மண் பரிசோதனை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மண் பரிசோதனை நிலையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் அருகே, லாலி ரோடு பகுதியில், கோவை மாவட்டத்துக்கான மண் பரிசோதனை ஆய்வகம் உள்ளது. இங்கு, ஒரு மாதிரிக்கு, 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதையும் படிங்க;  கோவை - சேலம் வழித் தடத்தில் இந்த ரயில்கள் 3 நாட்களுக்கு ரத்து- ஏன் தெரியுமா?

இதில், மண்ணின் தன்மை, மணிச்சத்து, சாம்பல் மற்றும் தழைச்சத்தின் அளவு, அவற்றை சரிசெய்ய தேவைப்படும் உரத்தின் அளவு குறித்த துல்லியமான தகவல் அடங்கிய மண்வள அட்டை வழங்கப்படும். இதை பின்பற்றி பயிர் சாகுபடி செய்யலாம்.

விவசாயிகள், நெல், பயறு வகை பயிர் சாகுபடிக்கு, 22 செ.மீ., ஆழம்; கரும்பு, வாழை பயிருக்கு, ஒரு அடி ஆழம் மற்றும் தென்னை உள்ளிட்ட மரப்பயிர்களுக்கு மூன்று அடி ஆழம் வரையில், ஆங்கில எழுத்து ‘V’ வடிவில் குழி தோண்டி, குழியின் ஆழம் வரையுள்ள மண்ணை சேகரிக்க வேண்டும்.

ஒரு ஏக்கரில், எட்டு இடத்தில் மாதிரி எடுக்க வேண்டும். ஒரு இடத்தில் எடுத்த மண் மாதிரியை வட்டமாக பரப்பி அதில், கால் பகுதியை எடுக்க வேண்டும். எட்டு மாதிரியிலும் சேகரமான கால்பகுதியை ஒன்றாக சேர்த்து வெயிலில் உலர்த்தி, முக்கால் கிலோ அளவிலான அந்த மண்ணை ஆய்வகத்தில் கொடுக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

குழியாக உள்ள பகுதி, நீர் தேங்கும் பகுதிகளில் மாதிரி சேகரிக்காமல், பயிர் சாகுபடிக்கு முன்னர் மட்டுமே மண் மாதிரியை சேகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி