கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் சாடிவயல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது கோவை குற்றாலம்.
வனப் பகுதிக்குள் அமைந்துள்ள இந்த சுற்றுலா தளம் வனத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.
உக்கடம் மற்றும் காந்திபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து இங்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
காந்திபுரம் பகுதியில் இருந்து சரியாக 36 கிலோமீட்டர் தொலைவில் கோவை குற்றாலம் அமைந்துள்ளது. வாரந்தோறும் திங்கட்கிழமை நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் கோவை குற்றாலம் செயல்படுகிறது.

கோவை குற்றாலம்
நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.60, சிறியவர்களுக்கு ரூ25 வசூலிக்கப்படுகிறது. மேலும், இருசக்கர வாகனத்திற்கு ரூ.20, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ. 50, கனரக வாகனத்திற்கு ரூ.100 பார்க்கிங் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை குற்றாலத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படுகிறது.
சாடிவயலில் நமது வாகனங்களை நிறுத்திவிட்டு வனத்துறையின் வாகனங்களில் தான் நாம் கோவை குற்றாலம் செல்ல வேண்டும்.

கோவை குற்றாலம்
வனத்துறையின் வாகனம் நம்மை இறக்கிவிடும் இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் நடை பயணமாக சென்று நீர்வீழ்ச்சியை அடையலாம்.
இயற்கை எழில் சூழ்ந்த இந்த இடத்தில் வனத்துறை முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கோடை காலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

கோவை குற்றாலம்
குழந்தைகளுக்கு நிச்சயம் இந்த சுற்றுலா ஒரு புதிய அனுபவத்தைத் தரும். இந்தக் கோடை விடுமுறை முடிவதற்கு ஒரு முறையேனும் கோவை குற்றாலம் சென்று வாருங்கள்.
செய்தியாளர் : சௌந்தர் மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.