முகப்பு /கோயம்புத்தூர் /

எலக்ட்ரானிக் கழிவுகளை கலை வண்ணமாக மாற்றும் கோவை மாநகராட்சி!

எலக்ட்ரானிக் கழிவுகளை கலை வண்ணமாக மாற்றும் கோவை மாநகராட்சி!

X
எலக்ட்ரானிக்

எலக்ட்ரானிக் கழிவுகளை கலை வண்ணமாக மாற்றும் கோவை மாநகராட்சி

Coimbatore Corporation : கோவையில் எலக்ட்ரானிக் கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகளை கொண்டு கார், டெலிபோன், கிராமஃபோன் உள்ளிட்ட பொருள்களின் பிரம்மாண்ட வடிவங்கள் உருவாக்கப்பட்டு செல்பி பாயிண்டுகளாக வைக்கப்படவுள்ளன. 

  • Last Updated :
  • Coimbatore, India

எலக்ட்ரானிக் கழிவுகளை கலை வண்ணமாக மாற்றி கோயம்புத்தூர் மாநகராட்சி அசத்தியுள்ளது.

வேஸ்ட்டுவெல்த் (Waste to Wealth) என்ற கருத்தின் அடிப்படையில் கோவையில் எலக்ட்ரானிக்கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகளைக் கொண்டு கார், டெலிபோன், கிராமஃபோன் உள்ளிட்ட பொருள்களின் பிரம்மாண்ட வடிவங்கள் உருவாக்கப்பட்டு செல்ஃபி பாயிண்டுகளாக வைக்கப்படவுள்ளன.

கோவை மாவட்டத்தை அழகுற மாற்றும் வகையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாககோவை உக்கடம் குளக்கரையில் வித்தியாசமான முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் கையில் எடுத்துள்ளது.

எலக்ட்ரானிக் கழிவுகளை கலை வண்ணமாக மாற்றும் கோவை மாநகராட்சி

இதையும் படிங்க : ஒவ்வொரு வீட்டிலும் குருவிக்கூடு..! சிட்டுக்குருவியை பாதுகாக்கும் கரிசல்பட்டி கிராம மக்கள்..!

 மாநகராட்சியின் குப்பைகள் கொட்டப்பட்ட வெள்ளலூர் குப்பை கிடங்கு மற்றும் பல்வேறு பகுதிகளில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பிரம்மாண்ட செல்ஃபி பாயிண்டுகள் அமைக்கப்பட உள்ளன. கார், டெலிபோன், கிராமபோன், தண்ணீர் பம்ப் உள்ளிட்ட 5 பொருள்களின் பிரம்மாண்ட உருவங்கள் பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கழிவுகளை கொண்டு உருவாக்கப்பட்டு வருகின்றன.

கிட்டத்தட்ட  5 டன் கழிவுகளை கொண்டு இந்த பிரமாண்ட வடிவங்கள் செய்யப்படுகின்றன.

மாநகராட்சியில் சேகரமாகும் பிளாஸ்டிக்கழிவுகள், பல்வேறு அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட கம்ப்யூட்டர் கீபோர்டுகள், மவுஸ், ஹார்டுடிஸ்க் போன்ற எலக்ட்ரானிக் கழிவுகள், தொழிற்சாலைகளிலிருந்து பெறப்பட்ட இரும்பு கழிவுகள் ஆகியவற்றை கொண்டு இந்த பிரம்மாண்ட உருவங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

எலக்ட்ரானிக் கழிவுகளை கலை வண்ணமாக மாற்றும் கோவை மாநகராட்சி

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    பொதுமக்களை ஈர்க்கும் வகையிலும், பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக்பொருள் கழிவுகள் எவ்வளவு வெளியேற்றப்பட்டு வருகிறது என்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: Coimbatore, Local News