ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை - அவினாசி சாலையில் லாஞ்சர்ஸ் வசதியுடன் உருவாகும் ரூ.1,600 கோடி மதிப்பிலான மேம்பாலம்..

கோவை - அவினாசி சாலையில் லாஞ்சர்ஸ் வசதியுடன் உருவாகும் ரூ.1,600 கோடி மதிப்பிலான மேம்பாலம்..

அவினாசி

அவினாசி சாலை மேம்பாலம்

Coimbatore Latest News : கோவை - அவினாசி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தில் 5 இடங்களில் இறங்கி, ஏறும் லாஞ்சர்ஸ் வசதி அமைய உள்ளது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை - அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1,600 கோடி செலவில் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் 4 வழிப்பாதையாக அமைக்கப்படுகிறது. இதற்காக மொத்தம் 306 தூண்கள் அமைக்கப்படுகின்றன.

இது தவிர மேம்பாலத்தில் ஏறி இறங்குவதற்கு வசதியாக லாஞ்சர்கள் அமைக்கப்படுகின்றன. அதன்படி, கோவை விமான நிலையம், ஹோப்காலேஜ், நவ இந்தியா, அண்ணாசிலை ஆகிய இடங்களில் 7 மீட்டர் அகலத்தில் ஏறு தளங்கள் மற்றும் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அவினாசி சாலை மேம்பாலம் கட்டுமானப்பணி..

இதன் மூலமாக ஏதேனும் ஒரு பகுதியிலிருந்து அவினாசி சாலை சந்திப்புக்கு வருபவர்கள் சுலபமாக இந்த மேம்பாலத்தில் ஏறி பயணிக்க முடியும். முன்னதாக கோவை காந்திபுரம் பகுதியில் சத்தி சாலை மற்றும் 100 அடி சாலையில் அமைக்கப்பட்ட மேம்பாலங்களில் சந்திப்புகளை இணைக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.இதனால் இந்த மேம்பாலம் பெரிய அளவில் பயனில்லாத மேம்பாலமாக உள்ளது.

அவினாசி சாலை மேம்பாலம் கட்டுமானப்பணி..

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எப்போதும் பரபரப்புடன் வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் அவினாசி சாலையில் இத்தகைய வசதியுடன் மேம்பாலம் அமைக்கப்படுவது, வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய பயனளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News