முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை வழியாக கோர்பாவுக்கு செல்லும் ரயில் ரத்து

கோவை வழியாக கோர்பாவுக்கு செல்லும் ரயில் ரத்து

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கேரள மாநிலம் கொச்சு வேலியில் இருந்து கோவை வழியாக கோர்பாவுக்கு இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோவை வழியாக கோர்பாவுக்கு இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோவை வழியாக கோர்பாவுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை கேரளா மட்டும் அல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தென்கிழக்கு மத்திய ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட நாக்பூா் அருகே கச்சே வாணிபகுதியில் சிக்னல் பராமரிப்பு மற்றும் பொறியியல் பராமரிப்பு பணிகள்

மேற்கொள்ளப்படுகிறது.

இதனால், கொச்சுவேலி - கோா்பா வாராந்திர விரைவு ரயில் (எண்: 22648) செப்டம்பா் 1 மற்றும் 5 ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோா்பா- கொச்சுச்வேலி வாராந்திர விரைவு ரயில் ( எண்: 22647) செப்டம்பா் 3 மற்றும் 7ஆம் தேதி ரத்துத் செய்யப்படுகிறது என பாலக்காடு ரயில்வே நிரவ்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News