கோவை மாவட்ட போலீசார் ஒவ்வொரு மாதமும் 100க்கு மேற்பட்ட தொலைந்த மற்றும் திருடு போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 350 செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர் போலீசார்.
இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நியூஸ் 18 உள்ளூர் தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது..
“தொலைந்த செல்போன்களை மீட்டுக் கொடுக்க தனியாக குழு அமைத்து அதனை மீட்டுக்கொடுத்து வருகிறோம். இந்த மாதம் 106 செல்போன்கள் மீட்டுக்கொடுத்துள்ளோம். இதன் மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும். ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 350 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.

செல்போன் தொலைந்துவிட்டதா.. கவலை வேண்டாம்..
சிலர் தொலைந்த மற்றும் திருடு போன செல்போன்கள் என தெரியாமல் அதனை வாங்கிவிடுகிறார்கள்.
அவர்களிடம் போலீசார் இதுகுறித்து எடுத்துக்கூறி, அந்த செல்போனை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கிறோம்.

உரியவர்களிடம் செல்போன்கள் ஒப்படைப்பு
செல்போன்கள் தொலைந்தால் போலீசார் கண்டுபிடிப்பார்களா? அப்படியே விட்டுவிடுவார்களா? என்ற சந்தேகம் வேண்டாம். புகார் அளித்தால் செல்போனை கண்டுபிடித்து தருவது எங்கள் பொறுப்பு.

கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்
செல்போன் தொலைந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் அல்லது இணையதளம் வாயிலாக தமிழ்நாடு காவல்துறை இணைய பக்கத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மாயமான செல்போன் குறித்து தமிழக காவல்துறைக்கு ஆன்லைன் மூலம் புகார் அளிக்க பின் வரும் லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:
https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?2
உங்கள் நகரத்திலிருந்து(கோயம்புத்தூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.