ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை மக்களின் அன்பை பெற்ற கனிவான போக்குவரத்து காவலர்..

கோவை மக்களின் அன்பை பெற்ற கனிவான போக்குவரத்து காவலர்..

X
கோவை

கோவை காவலர்

Coimbatore Police Dept | காவலர் அல்லிதுரையின் அன்பான பேச்சைக் கேட்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் இவரை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் அல்லிதுரை. இவரது பெயர் மட்டும் தான் கோவை மக்களுக்கு தெரியாது. ஆனால், இவரது கனிவான பேச்சும், அக்கறையான வார்த்தைகளையும் கேட்காத கோவை மக்கள் இருக்க மாட்டார்கள். கோவையின் பெரிய போக்குவரத்து சிக்னலான லட்சுமி மில்ஸ் சிக்னலில் தான் இவருக்கு தினமும் பணி. எந்த நேரமும் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் இந்த சிக்னலில் நின்று செல்லும் வாகன ஓட்டிகள் இவரது கனிவான வார்த்தைகளால் ஓரிரு நிமிடங்கள் மன அமைதி பெற்றுச் செல்கின்றனர்.

அந்த வகையில் வாகன ஓட்டிகளிடம் அவர் பேசும் சில வார்த்தைகள் உங்களுக்காக, “டே தம்பி ஹெல்மெட் போடுப்பா.. சின்ன பையனா இருக்கியே.."  "பிரச்சனை இல்லாத மனிதர்களே இல்லைங்க.. அதனால் வீட்டுப் பிரச்சனைகளை மனசுல வெச்சுட்டு வண்டி ஓட்டாதீங்க.. பொறுமையா போகனும்.." உள்ளிட்டவை அல்லிதுரை தினமும் பயன்படுத்தும் வார்த்தைகள். பல பிரச்சனைகளை மனதில் வைத்தபடி வாகனங்களை இயக்குவோர் இவரது அன்பான வார்த்தைகளை கேட்டால் நிச்சயம் மன அமைதியடைந்து, வாகனம் இயக்குவதில் முழு கவனத்தையும் செலுத்த தொடங்கிவிடுவார்கள்.

மேலும் பாதசாரிகள் பாதுகாப்பு, போக்குவரத்து விதிகளை மதித்தல், ஒலி மாசுபாடு உள்ளிட்ட ஏராளமான கருத்துக்களை சிக்னலில் நிற்கும் பொதுமக்கள் மத்தியில் பேசி வருகிறார் இந்த காவலர். "அட இப்படி ஒரு போலீசா.. நல்லா பேசுறாரே" என்று சிலாகித்து போகும் வாகன ஓட்டிகள் இவருக்கு தொடர்ந்து பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அல்லிதுரையின் அன்பான பேச்சைக் கேட்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் இவரை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து அல்லிதுரை கூறுகையில், "போக்குவரத்து காவலராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இதற்கு முன் சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றியுள்ளேன். போக்குவரத்து சிக்னலில் நிறைய வாகன ஓட்டிகள் நிற்பார்கள். கஷ்டங்களின் போதும் அவர்களுக்கு சேவை செய்வது நிறைவாக உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு சென்றிருப்பார்கள் என்று நினைக்கும்போது எனக்கு நிம்மதி கிடைக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சாலையில் நடைபெறும் விபத்துக்களை பார்க்கும்போது மிகுந்த சிரமமாக உள்ளது. சாலை விதிகளை மதிக்க வேண்டும். இதற்காக பொதுமக்களுக்கு நிறைய அட்வைஸ்களை செய்து வருகிறேன். ஒரு சிறிய விபத்து நடந்தாலும் குடும்பம் மிகுந்த சிரமங்களை சந்திக்கும். மக்களின் பாதுகாப்பான பயணமே எனது நோக்கம்" என்றார்.

First published:

Tags: Coimbatore, Local News