முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கேரளாவிலிருந்து வந்த லாரி- கோவையில் விபத்துக்குள்ளாகி கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றியதால் பரபரப்பு

கேரளாவிலிருந்து வந்த லாரி- கோவையில் விபத்துக்குள்ளாகி கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றியதால் பரபரப்பு

கோயம்புத்தூர் லாரி

கோயம்புத்தூர் லாரி

கோயம்புத்தூரில் விபத்துக்குள்ளான லாரியிலிருந்து கார்பன்-டை ஆக்ஸைடு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Last Updated :
  • Coimbatore, India

கேரளாவிலிருந்து கோவையை நோக்கி கார்பன் டை ஆக்சைடு ஏற்றி வந்த டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள தனியார் நிறுவனத்திலிருந்து கோவைக்கு கார்பன் டை ஆக்சைடு ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்தது. பிற்பகல் 3 மணி அளவில் டேங்கர் லாரி வட்டப்பாரா என்ற இடத்தின் அருகே வந்து கொண்டிருந்த பொழுது, மற்றொரு லாரி எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி மீது மோதியது. இதில் டேங்கர் லாரியில் இருந்த கார்பன் டை ஆக்சைடு வெண்ணிற புகையை போல வேகமாக  வெளியேறியது.

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. டேங்கர் லாரியில் இருந்த கார்பன் டை ஆக்சைடு முழுமையாக வெளியேறும் வரை அந்தப் பகுதியில் வேறு யாரையும்  அனுமதிக்காமல் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தடுத்து நிறுத்தினர்.

பெண் அரசு ஊழியர்களுக்கு பணி நேரம் குறைப்பு- புதுச்சேரி அரசு அறிவிப்பு

பின்னர் இரண்டு மணி நேரத்திற்கு பின்னரே பாலக்காடு - கோவை சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. விபத்து காரணமாக டேங்கர் லாரியில் இருந்து கார்பன் டை ஆக்சைடு வெளியேறியதன் காரணமாக அப்பகுதியில்  பரபரப்பான சூழல் நிலவியது.

top videos
    First published:

    Tags: Coimbatore, Kerala