ஹோம் /கோயம்புத்தூர் /

குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் “கவசம்..” கோவையில் புதிய அறக்கட்டளை துவக்கம்..

குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் “கவசம்..” கோவையில் புதிய அறக்கட்டளை துவக்கம்..

X
கோவை

கோவை

'Kavasam' for Crime Victims : விபத்து, பாலியல், கொலை குற்ற வழக்கு மற்றும் தற்கொலையால் பாதிக்கப்பட்ட குற்றவாளிகளின் உறவினர்களுக்கு மறுவாழ்வு அமைக்கும் மையமாக "கவசம்" என்ற கோவை மாநகர காவல்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் தனியார் பங்களிப்புடன் கோவை மாநகர காவல்துறை சார்பாக "கவசம் பவுண்டேஷன்" என்ற அறக்கட்டளை துவக்கப்பட்டுள்ளது. சாலை விபத்து மற்றும் பாலியல் வழக்கு, கொலை, தற்கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று வரும் குற்றவாளிகளின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் குழந்தைகள், கல்விச் செலவு உள்பட பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் விதமாக துவங்கப்பட்டது தான் இந்த “கவசம் பவுண்டேஷன்.”

இதில் தனியார் மூலம் நன்கொடைகள் பெற்று அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் கலந்துகொண்டு 10 லட்சம் ரூபாய் நிதிஉதவியை குற்றச்சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை சேர்ந்தவர்கள் என மொத்தம் 25 குடும்பங்களுக்கு வழங்கினர்.

இந்த விழாவில் காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, “கோவை மாநகரில் சமுதாய குற்றங்கள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கவசம் பவுண்டேஷன் சார்பாக பொருள் மற்றும் கல்விக்கான உதவி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு போக்சோ மற்றும் பாலியல் வழக்குகள் 75, தற்கொலை வழக்குகள் 797 பதிவாகியுள்ளது.

மேலும் இந்த சம்பவங்களால் மனநலம் பாதிக்கப்பட்டு அதன் மூலம் தற்கொலை நடைபெறுவது அதிகரித்து வருகிறது. கோவையில் ஆண்டுக்கு சராசரியாக 250 விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். 25 முதல் 30 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இந்த குற்றங்கள் குறைக்கப்பட வேண்டும். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.

குற்றச்சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களை சேர்ந்தவர்களுக்கு உதவும் ஒரு நல்ல நோக்கத்திலேயே இந்த  கவசம் பவுண்டேஷன் துவக்கப்பட்டுள்ளது” என கூறினார். இந்நிகழ்ச்சியில், காவல்துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், கவசம் பவுண்டேஷனின் தலைவர் ரவி சாம் மற்றும் நிறுவன அறங்காவலர்கள் கலந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Coimbatore, Local News