முகப்பு /கோயம்புத்தூர் /

ஆடாதவரையும் ஆடவைக்கும் டும்.. டும்.. சத்தம் - கோவையில் சுப, துக்க நிகழ்வுகளில் கலக்கும் ஜமாப் இசை குழுவினர்..

ஆடாதவரையும் ஆடவைக்கும் டும்.. டும்.. சத்தம் - கோவையில் சுப, துக்க நிகழ்வுகளில் கலக்கும் ஜமாப் இசை குழுவினர்..

X
ஜமாப்

ஜமாப் இசை குழுவினர்

Singanallur Jamab : கோவை சிங்காநல்லூரில் சுப, துக்க நிகழ்வுகளில் இசைக்கும் ஜமாப் குழுவினர் பற்றிய செய்திகுறிப்பு.

  • Last Updated :
  • Coimbatore, India

பாரம்பரியம் மிக்க நமது தமிழகத்தில், கலைகளுக்கும் அவற்றை ரசிக்கும் மக்களுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. இயல், இசை, நாடகம் என கலைகள் நம் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துள்ளன. காலத்திற்கேற்ப கலைகள் மறு உருவம் எடுக்கின்றனவே தவிர மனிதர்கள் வாழும் வரை கலைகளுக்கு அழிவு இல்லை என்பதே நிதர்சனம்.

இப்படிப்பட்ட கலைகளுள் ஒன்றுதான் துடும்பிசை. துடும்பு என்பது தோல் மூலம் செய்யப்பட்ட பெரிய இசைக்கருவி என்பதை குறிக்கிறது. ஆங்கிலத்தில் 'பேஸ்' என்று நாம் கூறும் "டும்..டும்" என்று ஓசையை எழுப்பும் இசைக்கருவியுடன் பல இசைக்கருவிகளை இணைத்து இசைக்கப்படுவதே துடும்பிசை.

கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இதனை 'ஜமாப்' என்ற பெயரில் இசைத்து வருகின்றனர். மாட்டுத்தோல் மாட்டிய இசைக்கருவிகளை இசைக்க ஆரம்பித்தால் உலகையே உலுக்குவது போன்ற அதிர்வுகளை கொடுக்கும் இந்த இசைக்கருவி, ஆடாதவரையும் ஆடவைக்கும், இசை அனுபவம் இல்லாதவரையும் தாளமிடச்செய்யும். மத்தளத்தில் தோல் உபயோகிப்பதற்கு பதிலாக பிளாஸ்டிக் ஷீட்களும் தற்போது உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜமாப் இசை குழுவினர்

கோவை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஜமாப் இசைக்குழுக்கள் உள்ளன. இதில் சிங்காநல்லூரில் செயல்படும் ஜமாப் இசைக்குழுவினர் தான் ஆர்.கே ஜமாப் குழுவினர். 50க்கும் மேற்பட்டோர் இந்த குழுவில் உள்ளனர். இது தவிர கல்லூரி, பள்ளி மாணவர்களும் விடுமுறை தினங்களில் இக்குழுவினருடன் இணைந்து ஜமாப் இசைக்க கற்றுக் கொள்வதுடன், அதனை முறையாகவும் இசைக்கின்றனர்.

இதையும் படிங்க : அந்தமான் போல இனி புதுவையில் ஆழ்கடல் அழகை ரசிக்கலாம்.. தயாராகும் ‘செமி சப்மெரைன்’ படகு...

வருமானம் குறைவு தான் என்றாலும், தாய் போல வாழ்க்கை கொடுத்த இந்த ஜமாப் இசையை விட்டு எங்கும் செல்ல மாட்டோம் என்கின்றனர் ஜமாப் இசைக்கலைஞர்கள். இதுகுறித்து ஆர்.கே ஜமாப் குழுவை சேர்ந்த ராகுல் கூறியதாவது, “இந்த குழு கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. எங்கள் குழுவில் 16 வயது முதல் நண்பர்கள் இணைந்து ஜமாப் கலையை பழகிக்கொண்டுள்ளனர்.

ஊரில் நல்ல நிகழ்ச்சிகளுக்கும், துக்க நிகழ்ச்சிகளுக்கும் சென்று ஜமாப் இசைத்து வருகிறோம். பேண்ட் செட், நாசிக் டோல், ஜமாப், தப்பு செட், மொடா உள்ளிட்ட வெவ்வேறு கருவிகளை கொண்டு இசை எழுப்பப்படுகிறது. ஜமாப் இசைக்கும் முன்பு தோல் மூலம் செய்யப்பட்ட கருவியை நெருப்பில் வைத்து காய்ச்சுவோம். அப்போது அந்த கருவி இறுக்கமடைந்து டும்.. டும் என்ற பேஸ் ஒலியை கொடுக்கிறது.

ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் தொடர்ந்து 3 மணி நேரம் ஜமாப் இசைப்போம். அடுத்து ஒரு மணி நேர இடைவெளி எடுத்துக் கொள்வோம். குழுவில் நிறைய பேர் இருப்பதால் கை வலி ஏற்பட்டால் மற்றவரிடம் மாற்றிக் கொள்ள சுலபமாக உள்ளது. மக்கள் மத்தியில் இந்த கலைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஏற்றபடி அதற்கு வழங்கப்படும் தொகையும் வேறுபடுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

2 நாட்கள் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியை முடித்து செல்லும்போது 2 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். அம்மா எப்படி ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வார்களோ அதேபோல் இந்த தொழிலை நேசிக்கிறோம்” என்று கூறினார்.

First published:

Tags: Coimbatore, Local News