ஹோம் /கோயம்புத்தூர் /

குளு குளு வசதியுடன் காத்திருப்பு அறை.! கோவை ரயில் நிலையமா இது..?

குளு குளு வசதியுடன் காத்திருப்பு அறை.! கோவை ரயில் நிலையமா இது..?

கோவை

கோவை ரயில் நிலையம்

Coimbatore District News : கோவை ரயில் நிலையமா இது..? குளு குளு வசதியுடன் காத்திருப்பு அறை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை ரயில் நிலையத்தில் குளு குளு ஏசி மற்றும் நவீன வசதிகளுடன் பயணிகள் காத்திருப்போர் அறை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக ரயில்வே துறைக்கு அதிக வருவாயை கோவை ரயில் நிலையம் ஈட்டிக்கொடுத்து வருகிறது. இதனிடையே கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்துவதோடு, அதிகப்படியான ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில் புதிய நவீன குளிர்சாதன காத்திருப்போர் அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பைசா செலவு இல்லாம என்ஜாய் பண்ண இப்படி ஒரு இடமா..? பொள்ளாச்சியில் இந்த இடத்திற்கு கண்டிப்பா போங்க..!

வண்ணமயமான இந்த காத்திருப்பு அறையை பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கு 25 ரூபாய் என்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன குளிர்சாதன அறையை கோவை ரயில்வே முதன்மை கோட்ட வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் இதனை திறந்து வைத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கோவை ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் அதிக பயணிகள் வருவதால் இந்த அறை 12 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கோவை ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளுக்கு நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் செயலி மூலம் டாக்ஸி புக் செய்யும் மையம் ஏற்படுத்தப்பட உள்ளது” என அவர் தெரிவித்தார்.

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News