ஹோம் /கோயம்புத்தூர் /

பைசா செலவு இல்லாம என்ஜாய் பண்ண இப்படி ஒரு இடமா..? பொள்ளாச்சியில் இந்த இடத்திற்கு கண்டிப்பா போங்க..!

பைசா செலவு இல்லாம என்ஜாய் பண்ண இப்படி ஒரு இடமா..? பொள்ளாச்சியில் இந்த இடத்திற்கு கண்டிப்பா போங்க..!

பொள்ளாச்சி

பொள்ளாச்சி

Coimbatore District News : அம்பராம்பாளையத்தில் ஆழியாற்று தண்ணீர் இதன் வழியாகவே செல்கிறது. இதை பெரியாறு என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த ஆற்றில் குளித்தும் விளையாடலாம். அருகே தங்க தனியார் விடுதிகளும் இருக்கின்றன. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pollachi, India

கொங்குநாட்டின் முக்கியமான பதியாக இருக்கும் கோவை மாவட்டத்தில், தென்பகுதியில் இருக்கும் ஓர் அழகிய ஊர் தான் பொள்ளாச்சி.

இந்த பொள்ளாச்சி பகுதி ஏராளமான சுற்றுலா இடங்களையும் கொண்டுள்ளது. இதில் ஆழியார் அணை, கவி அருவி, டாப்சிலிப், வரகளியார் யானைகள் முகாம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களும் காணப்படுகின்றன.

பொள்ளாச்சியில் தென் மரங்களும், அருவிகளும் சேர்ந்து இயற்கை அழகு கொட்டி கிடப்பதாலும், சினிமா வட்டாரங்களும் படையெடுத்து வருகின்றனர்.

இதில், தமிழ் மட்டும் அல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட பங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அம்பராம்பாளையம்

இதையும் படிங்க : நகைக்கடை ஷட்டரை உடைத்து கொள்ளை.. மேட்டுப்பாளையத்தில் மர்ம நபர்கள் கைவரிசை

இப்படி சினிமாக்களும் நடந்தாலும் பொள்ளாச்சி சுற்றுலா தலமாகவும் மாறியுள்ளது. வெளியூர்களை சேர்ந்த பயணிகளும் ஒரு பைசா கூட செலவு இல்லாமல் பொள்ளாச்சியில் இந்த இடத்திற்கு சுற்றுலா போகலாம்.

அப்படி எந்த இடம் என்றால் அது பொள்ளாச்சியில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள அம்பராம்பாளையம் தான். பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் செல்லாம். ஆட்டோர், கார், பைக்குகளிலும் செல்லலாம்.

அம்பராம்பாளையத்தில் ஆழியாற்று தண்ணீர் இதன் வழியாகவே செல்கிறது. இதை பெரியாறு என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த ஆற்றில் குளித்தும் விளையாடலாம். அருகே தங்க தனியார் விடுதிகளும் இருக்கின்றன.

இதையும் படிங்க : 3 மாதத்தில் கோவையில் வ.உ.சி சிலை அமைக்கப்படும் - அமைச்சர் சாமிநாதன் தகவல்

அம்ரம்பாளையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ சென்றால், மூலையாறுக்கு செல்லலாம். அதாவது அம்பாரம்பாளையம் நீரேற்று நிலையம் அருகே உள்ள இடத்தில் மகிழ்ச்சியாக குளித்தும். இங்கு வந்து ஒரு சிலர் சமைத்தும் உண்டு மகிழ்கின்றனர்.

கேரளா மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து குளித்தும், சமைத்து உண்டும் தங்களுடைய பொழுதை போக்கியும் மகிழ்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆழியாற்று நீரில் நிம்மதியாகவும் குளித்து வீட்டு முறைப்படியே மூலையாற்றிலேயே சமைத்து விட்டு மகிழ்ச்சியாக வரலாம்.

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News