பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா துவங்கியுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்பு இணைந்து கோவை மாவட்டம் பொள்ளாசியில் பலூன் திருவிழாவை துவக்கியுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துவங்கப்பட்டுள்ள இந்த சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழா வரும் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த சர்வதேச பலூன் திருவிழாவில் நெதர்லாந்து, அமெரிக்கா,பிரேசில், கனடா உட்பட 8 நாடுகளில் இருந்து 10 வெப்ப பலூன்கள் வரவழைக்கப்பட்டு அவை பறக்கவிடப்பட்டுள்ளன. 60 அடி முதல் 100 அடி உயரம் கொண்ட இந்த பலூன்களில் வெப்பக்காற்று அடிக்கப்பட்டு மிக்கி மவுஸ், டைனோசர் உட்பட பல்வேறு வடிவங்களில் பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பிலும் ஒரு பலூன் பறக்க விடப்பட்டது. இந்த சர்வதேச பலூன் திருவிழாவில் கலந்துகொண்டு பலூனின் பறப்பதற்காக தமிழக மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த பலூன் தரை மட்டத்திலிருந்து 5 கிலோ மீட்டர் முதல் 10 கிலோ மீட்டர் வரை செல்லும். ஒரு பலூனில் மூன்று பேர் பயணிக்கலாம். இந்த பலூனில் பறப்பதற்கு நபர் ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிகாலை முதலே வானில் வட்டமிட்டு சென்று வரும் ராட்சத பலூன்களை கண்டு பொள்ளாச்சி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News, Pollachi