கோவையில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பருவமழை காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெங்கு நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது.
கோவை மாவட்டத்திலும் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவில் பதிவாகிறது. கோவையில் தற்போது தினசரி 2 முதல் 3 பேர் வரை டெங்கு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவர்கள் கோவை அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க : டாப்சிலிப்..கோழிகமுக்தி யானைகள் முகாம்.. பொள்ளாச்சியில் மிஸ் பண்ணக்கூடாத ஸ்பாட்கள்
மாவட்டத்தில் இதுவரை உயிரிழப்பு ஏதுவும் பதிவாகவில்லை. இதனிடையே கோவையில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பருவமழை தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு பெய்து வருவதால், டெங்கு கொசுக்கள் உற்பத்தி அதிகரித்திருப்பதாக கூறினர்.
மேலும், வீடுகள், பொது இடங்களில் போட்டு வைத்துள்ள டயர், உடைந்த தொட்டிகள், பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கி நிற்கும் தண்ணீரிலும், குடியிருப்புகளை சுற்றிலும் தேங்கி இருக்கும் மழைநீரிலும் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதாக தெரிவித்தனர்.
மேலும் படிக்க : கோவையில் உங்களின் மனதை மயக்கும் அழகான சுற்றுலா தலங்கள்.! கண்டிப்பா ஒரு விசிட் அடிங்க
ஊரக பகுதிகளில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகளை சுற்றிலும் போட்டு வைத்துள்ள பழைய பொருட்களை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனிடையே வீடுகளைச் சுற்றிலும் உள்ள பொருட்களை சுகாதாரத்துறையினர் பழைய பொருட்கள் வியாபாரிகள் 155 பேரை வைத்து அகற்றும் போது அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டெங்கு பரவல் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு வேண்டும் என்று அதிகாரிகள்தெரிவித்தனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News, Tourist spots