ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி தீவிரம்...   

கோவை மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி தீவிரம்...   

கோவை

கோவை மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி தீவிரம்

Coimbatore District News : கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகள் தொடங்கியது. அதிகாரிகள் கல்லூரிகளுக்கே நேரில் சென்று மாணவர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

தேர்தல் ஆணையம் 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் வாக்காளர் அட்டை வழங்கிட அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல் தலைமுறை வாக்காளர்களாக போகும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோவையில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று புதிய இளம் வாக்காளர்களை இணைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை பெறக்கூடிய படிவம் 6-ஐ துணை வட்டாட்சியர் கவிதா வழங்கினார்.

இதையும் படிங்க : நகைக்கடை ஷட்டரை உடைத்து கொள்ளை.. மேட்டுப்பாளையத்தில் மர்ம நபர்கள் கைவரிசை

இதில் 200 மாணவிகள் படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்து கொடுத்தனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் புதிய வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் சேர்க்கப்படும் என்றும் வாக்காளர் அடையாள அட்டை மாணவிகளின் வீடு தேடி வரும் என்றும் துணை வட்டாட்சியர் கவிதா தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல் கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் முதல் முறையாக வாக்களிக்க உள்ள கல்லூரி மாணவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News