கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள கல்லார் வனப்பகுதியில் குரங்குகளின் தாக்குதலினால் காயமடைந்து, பறக்க இயலாமல் தவித்த ஆண் இருவாச்சி பறவையினை மீட்ட வனத்துறையினர் அதற்கு உரிய சிகிச்சையளித்து மீண்டும் வனப்பகுதியில் விடுவித்தனர்.
நீலகிரி மலையடிவார வனப்பகுதியான கல்லார் காட்டுப்பகுதியில் தற்போது இருவாச்சி பறவைகள் பெருமளவு தென்படுகின்றன. மலைக்காடுகளில் காணப்படும் இருவாச்சி எனப்படும் இந்த ஹார்ன்பில் பறவைகள் அழித்து வரும் பறவைகள் இன பட்டியலில் உள்ளது.
இந்நிலையில், இன்று காலை கல்லாரில் உள்ள தூரிப்பாலம் பகுதியில் ஒரு இருவாச்சி பறவை பறக்க இயலாமல் தத்தளித்து வருவதாக அப்பகுதி கிராம மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர், இறகு பகுதியில் காயத்துடன் கிடந்த பறவையை மீட்டு வனத்துறை மரக்கிடங்குக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் வனத்துறை மருத்துவர்களின் ஆலோசனைப்படி பறவைக்கு டி.டி ஊசி செலுத்தியதோடு காயத்தை விரைந்து குணப்படுத்தும் மருந்துகளையும் அளித்தனர். சிறிது நேரத்தில் உடல் நலம் தேறிய இருவாச்சி பறவை பறக்கும் நிலைக்குத் திரும்பியது. இதனையடுத்து கல்லார் மலையடிவார அடர்ந்த காட்டுப்பகுதிக்குப் பறவையை எடுத்துச் சென்ற வனத்துறையினர் அதனைப் பாதுகாப்பாக விடுவித்தனர்.
Also Read : பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. உறவினர் வெறிச்செயல்
மரத்தின் மீதிருந்த இருவாச்சி பறவையை அங்கிருந்த குரங்குகள் சூழ்ந்து கொண்டு தாக்கியதால் பறவைக்குச் சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாகவும் உரிய நேரத்தில் சரியான சிகிச்சை அளித்த காரணத்தால் காப்பாற்றப்பட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
செய்தியாளர் - எஸ்.யோகேஸ்வரன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Forest Department