முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் குழந்தைகளை பாதிக்கும் ஹீமோபிலியா.. அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவு துவக்கம்!

கோவையில் குழந்தைகளை பாதிக்கும் ஹீமோபிலியா.. அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவு துவக்கம்!

X
கோவை

கோவை அரசு மருத்துவமனை

Coimbatore special ward in GH | கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகளை பாதிக்கும் ஹீமோபிலியா சிறப்பு சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

ஹீமோபிலியா என்பது மரபணு வழியாக வரக்கூடிய ஒரு குறைபாடு. சாதாரணமாக உடலில் காயங்கள் ஏற்பட்டால் சில நிமிடங்களில் ரத்தக் கசிவு, தானாக நின்றுவிடும். பெரிய காயமாக இருந்தால் அதற்கான சிகிச்சை அளித்தால் ரத்தம் வெளியேறுவது நின்றுவிடும். ஆனால்ஹீமோபிலியாகுறைபாடு உள்ளவர்களுக்கு, இரத்தம் உறையும் தன்மை இல்லாததால், இரத்தம் தொடர்ந்து வெளியேறும்.

உரியசிகிச்சை இல்லாவிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும். மரபு வழிகுறைபாடானஇது, ஆண்களை மட்டுமே பாதிக்கும் தன்மை உடையது. இரத்தத்தை உறைய வைக்க 13 காரணிகள் உள்ள சூழலில் அதில் ஏதேனும் ஒரு காரணி குறைபாடு இருந்தாலும் அவர்களுக்கு ரத்தம் உறைவதில் சிக்கல் ஏற்படும். இந்தநோய்பாதிப்பு உள்ள குழந்தைகள்நடக்கதொடங்கிய பின்பு, கணுக்கால் மூட்டு மற்றும் முழங்கால் போன்ற உறுப்புகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, வீக்கம் மற்றும் வலி உண்டாகும்.

ALSO READ | கொளுத்தும் வெயிலில் அயராது உழைக்கும் கோவை போலீஸ்.. நேரில் சென்று பழங்கள் வழங்கும் இளைஞர்கள்!

ரத்தப் பரிசோதனை மூலம் ரத்தம் உறையும் காரணி குறைவாக இருப்பதை உறுதி செய்ய முடியும். கோவை அரசு மருத்துவமனையில் இதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தைசுற்றியுள்ள பகுதிகளில் ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்ட 350 பேர் உள்ளனர்.

இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் 18 வயதுக்குட்பட்ட ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நோய் தடுப்பு சிகிச்சையை 21 குழந்தைகளுக்கு மருத்துவமனை முதல்வர் நிர்மலா துவக்கி வைத்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Coimbatore, Local News