Home /coimbatore /

கோயம்புத்தூர் விவசாயிகளுக்கு முக்கிய தகவல் - ஆனைமலை வேளாண் அதிகாரி

கோயம்புத்தூர் விவசாயிகளுக்கு முக்கிய தகவல் - ஆனைமலை வேளாண் அதிகாரி

கோவை

கோவை

சிறு, குறு விவசாயிகள் வாங்கி பயன்பெறும் வகையில் பாரம்பரிய விதை நெல் அரசு மானிய விலையில் கிடைக்கும் என்றும் அது குறித்த விவரங்களையும் கோவை மாவட்டம் ஆனைமலை வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வேளாண் அதிகாரி சிறு, குறு விவசாயிகள் வாங்கி பயன்பெறும் வகையில் பாரம்பரிய விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக நெல், நிலக்கடலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பெய்துவரும் தென் மேற்கு பருவமழையின் காரணமாக ஆனைமலை பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.  இதனால் விவசாயிகள் நெல்லை பயிரிட தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - பரபரப்பு சம்பவம்
 இந்நிலையில், அவர்கள் ஆனைமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள நெல் விதைகளை வாங்க வருமாறு வேளாண் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறுகையில், “ஆனைமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் பாரம்பரிய நெல் வகைகள் 200 கிலோ இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் கருப்பு கவுனி 60 கிலோ மற்றும் சீரக சம்பா 140 கிலோ விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வெளிச்சந்தையில் 25 ரூபாய்க்கு விற்கப்படும் பாரம்பரிய விதை நெல் அரசு மானிய விலையில் 12 ரூபாய் 50 காசுகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு 10 கிலோ வரை நெல் விதைகள் வழங்கப்படுகிறது. இதனை சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி