Home /coimbatore /

கோவை மாவட்ட வாக்காளர்களுக்கு ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 

கோவை மாவட்ட வாக்காளர்களுக்கு ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வாக்காளர்கள் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்கான வழிமுறைகளையும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவை மாவட்ட வாக்காளர்கள் ஆதார் எண் விவரங்களை இணைய வழியில் இணைத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை கடந்த அகஸ்ட் 1ஆம் தேதி துவங்கி வரும் 2023 ஆண்டு மார்ச் 3ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது.

    ஆகையால் எந்த வித நிபந்தனையும் இன்றி வாக்காளர்கள் தன்னார்வமாக தங்களது ஆதார் எண் விபரங்களை வாக்காளர் பட்டியலுடன் படிவம் 6பிஐ https://WWW.nvsp.in, https://votersportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மூலமாகவும், வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் மொபைல் ஆப் போன்ற செயலி வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

    இணைய வழிமுறையில் பதிவு செய்யாதவர்கள், வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஆதார் எண் விபரங்களை வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோருக்கு படிவம் 6பி ல் தெரிவித்து வாக்காளர் பட்டியலுடன் இணைத்துகொள்ளலாம்.

    மேலும், இப்பணிகளுக்கான சிறப்பு முகாம் வரும் 4ஆம் தேதி அன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடக்கவுள்ளது. இந்த சிறப்பு முகாமில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடியில் அங்குள்ள நிலை அலுவலரிடம் வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி