Home /coimbatore /

கோவை மாவட்ட ஓய்வூதியதாரர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு - இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

கோவை மாவட்ட ஓய்வூதியதாரர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு - இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

கோவை

கோவை

Important Announcement For Coimbatore District Pensioners | கோவை மாவட்ட ஓய்வூதியர்கள் இன்றும் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வில்லையா நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோவை மாவட்டத்தில் 5,210 ஓய்வூதியர்கள் இன்னும் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்காமல் இருக்கின்றனர். இதுகுறித்து உரிய தகவலை தெரிவித்தால், வீட்டிற்கே சென்று நேர்காணல் நடத்த, கருவூலக அதிகாரிகள் முடிவு செய்திருக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு, 2022-23-ம் ஆண்டுக்கான நேர்காணல், ஜூலை முதல் நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் மாவட்ட கருவூலகம் மற்றும் சார் நிலை கருவூலகங்கள் மூலமாக, 35,199 ஓய்வூதியர்கள், ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க; மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

இந்நிலையில், இதுவரை, 29,989 ஓய்வூதியர்கள் மின்னணு வாழ்நாள் மற்றும் வாழ்நாள் சான்று சமர்ப்பித்து, நேர்காணல் செய்திருக்கின்றனர். மீதமுள்ள 5,210 ஓய்வூதியர்கள் இன்னும் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்காமலும், நேர்காணலில் பங்கேற்காமலும் இருக்கின்றனர்.

ஓய்வூதியர்கள் நலனை கருத்தில் கொண்டும், கருவூலகத்துக்கு நேரில் வரும் இடர்பாடுகளை தவிர்க்கும் வகையிலும், ஜீவன் பிரமாண் இணைய தளம் https://jeevanpramaan.gov.in/ வாயிலாக, அஞ்சல் துறை, வங்கி, இ-சேவை மற்றும் பொது சேவை மையங்கள் மற்றும் மாவட்ட கருவூலகம், சார் கருவூலகங்கள் மூலமாக, மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து, ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயுற்ற ஓய்வூதியர்கள், 0422 - 2303022 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால், ஓய்வூதியர்களின் வீட்டுக்கே கருவூலக பணியாளர்கள் வந்து நேர்காணல் நடத்துவர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுவரை வாழ்நாள் சான்று சமர்ப்பிக்காத மற்றும் நேர்காணல் செய்யாதவர்கள், 30-ம் தேதிக்குள் சமர்ப்பித்து, ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்என, மாவட்ட கருவூலக அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி