முகப்பு /கோயம்புத்தூர் /

வெளிமாநில தொழிலாளர்கள் இல்லாவிட்டால் தொழில்கள் முடங்கும்... கோவை தொழில் அமைப்புகள்..!

வெளிமாநில தொழிலாளர்கள் இல்லாவிட்டால் தொழில்கள் முடங்கும்... கோவை தொழில் அமைப்புகள்..!

X
வடமாநில

வடமாநில தொழிலாளர்கள்

Migrant Workers in Coimbatore | தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியைத் தீர்க்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

தமிழகத்தில் பல்வேறு நகரங்கள் இருந்தாலும் கோவை, திருப்பூர் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குகின்றன. எனவே வடமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் கட்டிட வேலைகளுக்காக மட்டுமல்லாமல், ஜவுளி, உற்பத்தி தொழிற்சாலைகளில் பணி புரிய வருகின்றனர். இதனால் இந்த இரண்டு மாவட்டங்களிலும் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.

இதனிடையே கடந்த மாதம் திருப்பூரில் தமிழக தொழிலாளர்களுக்கும், வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இரு தரப்பினரும் கோஷ்டியாக ஒருவரை ஒருவர் துரத்துவது போன்ற காட்சிகள் வெளியானது.

சமூக வலைத்தளங்களில் விஷம பிரச்சாரம்..

இதனிடையே கோவையில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் விஷம பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே பீகார் சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் பதிவுகளால் இந்த பிரச்னை பூதாகரமானது.

இதையும் படிக்க :  வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை, வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை... அரசு எச்சரிக்கை..!

குடும்பத்தினரின் நெருக்கடி..

வட மாநிலத்தில் உள்ள தொழிலாளிகளின் பெற்றோர்கள் தொடர்ந்து இங்கு பணிபுரிந்து வருபவர்களுக்கு நெருக்கடி கொடுத்து அவர்களை திருப்பி ஊருக்கு வர சொல்வதாகவும் இங்கே பணிபுரிந்து வருகின்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடந்த வாரம் முதல் சொந்த ஊர் திரும்பி வருவதாகவும் தொழில்முனைவோர் கூறி வருகின்றனர்.

தொழில்கள் முடங்கும் அபாயம்..

இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருவதால் தொழில் முடக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல ஆண்டுகளாக உள்ளூர் தொழிலாளர்களை கொண்டு உருவாக்கிய தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் இன்று வடமாநில தொழிலாளர்கள் இல்லையென்றால் தொழிலே இல்லை என்ற நிலைமை ஏற்பட என்ன காரணம் என்று கோவை தொழில் அமைப்புகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ்-இடம் கேள்வியெழுப்பினோம். அதற்கு அவர் கூறியதாவது:-

சேவை துறைக்கு மாறிய உள்ளூர் தொழிலாளர்கள்

“கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும், பெரு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன, இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனங்களில் உதவியாளர்களாக  வந்த வட மாநில தொழிலாளர்கள், தற்போது தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களாக உள்ளனர். அதே நேரத்தில் உள்ளூர் தொழிலாளர்கள் உற்பத்தி துறையைக் கைவிட்டுவிட்டு, சேவைத் துறையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனிடையே கடந்த சில தினங்களாக அச்சம் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் மாவட்டத்தை விட்டு வெளியேறுகின்றனர். இதனால் தொழில் ஸ்தம்பித்து உள்ளது. இன்று வட மாநில தொழிலாளர்கள் இல்லாமல் தொழில்துறை செயல்படாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது தொழில்துறை குறைந்த லாபத்தில் தான் செயல்பட்டு வருகிறது. மின் கட்டணம், வாடகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ள சூழலில் தான் தொழிலாளிகளுக்கு ஊதியம் கொடுக்கிறோம். கடந்த காலகட்டங்களில் உள்ளூர் தொழிலாளர்களை விட வட மாநில தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைவாக இருந்தது. தற்போது உள்ளூர் தொழிலாளர்களை விட அதிக ஊதியத்தை வட மாநில தொழிலாளர்கள் பெற்று வருகின்றனர்.

தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியைத் தீர்க்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

First published:

Tags: Coimbatore, Local News, Migrant Workers