முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோயம்புத்தூரில் கணவனைத் தற்கொலைக்குத் தூண்டியதாக மனைவி கைது...

கோயம்புத்தூரில் கணவனைத் தற்கொலைக்குத் தூண்டியதாக மனைவி கைது...

குடும்ப வன்முறை- கணவர் தற்கொலை

குடும்ப வன்முறை- கணவர் தற்கொலை

கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி அனுதர்ஷினி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாவட்டம் இராமநாதபுரம் இந்திரா நகரில் வழக்கறிஞர் கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி அனுதர்ஷினி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை இராமநாதபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அக்‌ஷய். வழக்கறிஞராக பயிற்சி எடுத்து வந்தார். இவருக்கும் ஈரோடு பகுதியை சேர்ந்த அனுதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. அனுதர்ஷினி கல்லூரியில் படித்து வந்ததால் ஈரோட்டில் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், வழகறிஞர் அக்‌ஷய் கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

இதையும் வாசிக்க5 வயது குழந்தைகளுக்கு பேருந்தில் இனி இலவசம்.. என்ன சொல்றாங்க கோவை மக்கள்?

இந்நிலையில் தனது மகன் தற்கொலைக்கு காரணம் அனுதர்ஷினிதான் எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்‌ஷய் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அனுதர்ஷினி மீது கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைந்தனர்.

top videos
    First published:

    Tags: Domestic Violence