ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் நடைபெற்ற மனிதநேய வார விழா- பாரம்பரிய இசைக்கருவிகள் வாசித்த பழங்குடி மக்கள்

கோவையில் நடைபெற்ற மனிதநேய வார விழா- பாரம்பரிய இசைக்கருவிகள் வாசித்த பழங்குடி மக்கள்

X
புகைப்பட

புகைப்பட கண்காட்சி

Coimbatore | கோவையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனிதநேய வார விழா நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனிதநேய வார விழாவின் ஒரு பகுதியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக அமைக்கப்பட்ட அரங்கை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மனிதநேய வார விழா ஜனவரி 24 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு அரங்கை திறந்து வைத்தார்.

இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு அரசு சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், மருத்துவம், தரமான உணவு, வாழ்க்கை முறைகள் குறித்த புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து சாதனை.. கோவை பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

விழாவில் பழங்குடியின மக்கள், உருமி உள்ளிட்ட தங்களது பல்வேறு பாரம்பரிய இசைக் கருவிகளை வாசித்தும், நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஜனவரி 30ஆம் தேதி வரை நாள்தோறும் பல்வேறு துறைகள் சார்ந்த கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

First published:

Tags: Coimbatore, Local News