முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி.. நாற்காலி போட்டு அமர வைத்துச் சென்ற கொடூரம்.. 

கோவையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி.. நாற்காலி போட்டு அமர வைத்துச் சென்ற கொடூரம்.. 

X
உயிரிழந்த

உயிரிழந்த தொழிலாளியை நாற்காலியில் அமர வைத்துள்ளனர்

Coimbatore News : கோவை நகரில் உயிரிழந்தவரை சேர் போட்டு அமர வைத்துச் சென்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி ஒருவரை சாலையில் சேர் போட்டு அமர வைத்து விட்டுச் சென்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

மரியாதைக்கும், உபசரிப்புக்கும் பெயர் பெற்ற மெட்ரோ நகரமாக உள்ளது நமது கோவை. இணையத்தில் எந்த பக்கத்தை புரட்டினாலும் கோவையில் அன்பான, அமைதியான மக்கள் வாழ்கிறார்கள் என்ற மீம்களையும், செய்திகளையும் பார்க்க முடிகிறது.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில், மற்ற மாவட்டங்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக திகழும் கோவையில் பணியின் போது உயிரிழந்த தொழிலாளிக்கு கிடைத்த இறுதி மரியாதை மனிதம் எங்கே? என்று கேள்வி கேட்கும் வகையில் அமைந்துள்ளது.

கோவை மாவட்டம் வடவள்ளியில் வேம்பு அவென்யூ பகுதியில் தனியார் அபார்ட்மென்ட் உள்ளது. இங்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது சாரம் சரிந்து விழுந்ததில் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்க அபார்ட்மென்ட்டில் வசிப்பவர்களும், உடன் பணிபுரிபுரிவர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தயங்கினர்.

உயிரிழந்த தொழிலாளியை நாற்காலியில் அமர வைத்துள்ளனர்

இவரை பணிக்கு அழைத்து வந்தவர்கள் உடலின் அருகே செல்ல அஞ்சி நடுங்கினர். சிறிது நேரத்தில் அவரது உடலை தூக்கி அபார்ட்மென்டுக்கு வெளியே உள்ள சாலையில் சேர் போட்டு அமர வைத்து, அவர் மீது போர்வையை போர்த்திவிட்டு, ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க : திடீரென வீசிய சூறாவளி காற்று.. நெல்மடூர் கிராமத்தில் மரங்கள் விழுந்து 40 வீடுகள் சேதம்..

 சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் உயிரிழந்தவர் உடல் என்ன ஆனது? என்பது குறித்து அபார்ட்மென்ட்டில் வசிக்கும் யாரும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. அவ்வழியாகச் சென்றவர்களும் சடலம் ஒன்று சாலையில் அமர வைத்திருப்பதை பொருட்படுத்தாமல் சென்றிருக்கின்றனர். தொழிலாளி ஒருவர் அனாதையாக கிடந்துள்ளார்.

நீண்ட நேரத்திற்குப் பின் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரை பரிசோதனை செய்ததில் தொழிலாளி இறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வடவள்ளி போலீச்ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில் அவர் அத்திபாளையம் பகுதியைச் சேர்ந்த 50 வயதான சந்திரன் என்பது தெரியவந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதனிடையே சந்திரனின் சடலம் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானது. பணியின் போது எதிர்பாராத விதமாக படுகாயமடைந்த தொழிலாளியை மீட்காமலும், உயிரிழந்தவரின் சடலத்தை காம்பவுண்டுக்கு வெளியே சென்று வைக்குமாறு கூறியும் சக மக்களே மனிதத்தை மதிக்காமல் இருப்பது கொடூரத்தின் உச்சம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    First published:

    Tags: Coimbatore, Crime News, Local News