இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் HUID எனும் ஆறு இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் இல்லாத தங்க நகைகள் மற்றும் தங்கத்திலான கலைப் பொருட்கள் விற்பனைக்கு அனுமதி இல்லை எனவும், தங்க நகைகளை வாங்கும் முன் HUID குறியீடு உள்ளதா என்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுத்தப்பட்டுள்ளது.
HUID1 குறியீடு என்பது என்ன? எதற்காக இந்த HUID கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கோவையை சேர்ந்த BIS (இந்திய தர நிர்ணய ஆணையம்) அதிகாரியிடம் கேள்வில் எழுப்பினோம். அதற்கு பி.ஐ.எஸ் அதிகாரி கவின் கூறியதாவது, “HUID எனும் தனித்துவமான அடையாளம் என்பது எண்கள் மற்றும் எழுத்துக்களை கொண்ட ஆறு இலக்க எண்ணெழுத்து குறியீடாகும். BIS-ல் பதிவு பெற்ற நகை விற்பனையாளர்கள் தாங்கள் தயாரித்த தங்க நகைகளை BIS-ல் அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க் மையங்களுக்கு அனுப்ப வேண்டும்.
ஹால்மார்க் மையங்கள் BIS வழங்கிய நடைமுறைகளை பின்பற்றி நகைகளில் தூய்மை தன்மையை பரிசோதித்து, உரிய தூய்மை தன்மை உறுதி செய்த பின்னரே நகைகளில் லேசர் மூலம் BIS முத்திரை, தங்கத்தின் தூய்மை மற்றும் HUID ஆகிய மூன்று கட்டாய குறியீடுகள் குறிக்கப்படுகிறது. நுகர்வோர் மற்றும் நகை வாங்குபவர்கள் BIS Care App என்னும் செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து தங்க நகைகளின் உண்மை தன்மையை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த HUID குறியீட்டை வைத்து தங்கத்தின் தரம், தயாரிக்கப்பட்ட தொழிற்சாலை, விற்பனை செய்த நாள், எடை, விற்பனை செய்தவரின் விவரம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். HUID கட்டாயம் என்பது குறித்து கடந்த ஜூலை மாதமே மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பிறகு கால அவகாசம் கொடுக்கப்பட்டுதான் தற்போது நடைமுறைக்கு வருகிறது. HUID என்பது தங்க நகைக்கான ஆதர் எண் போன்றது. இனிமேல் இந்த குறியீடு இல்லாமல் தங்க நகையை விற்பனை செய்யக்கூடாது. இது சட்டவிரோதமாகும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
HUID குறியீடு இல்லாமல் பொதுமக்கள் தங்க நகை வாங்கினால் அது நம்பகத்தன்மை இல்லாமலேயே இருக்கும் என்பது மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். தங்க நகை வியாபாரிகள் HUID குறியீட்டுடன் தான் நகை விற்பனை செய்கின்றனரா? அல்லது தயாரிக்கின்றனரா? என்பது குறித்து தொடர்ந்து நாங்கள் ஆய்வு மேற்கொள்வோம். இதில் குளறுபடி இருந்தால் சம்மந்தப்பட்ட நகை விற்பனையாளர் மீதும் தயாரிப்பாளர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News