ஹோம் /கோயம்புத்தூர் /

கொரோனா நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பது எப்படி.? கோவை அரசு மருத்துவமனையில் ஒத்திகை

கொரோனா நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பது எப்படி.? கோவை அரசு மருத்துவமனையில் ஒத்திகை

X
கோவை

கோவை

Coimbatore Government Hospital : கொரோனா நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பது எப்படி? என கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் ஒத்திகை நடந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக வந்தால் முதற்கட்டமாக என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த ஒத்திகை நடைபெற்றது.

கொரோனா தொற்று மீண்டும்‌ சீனா, பிரேசில்‌, பிரான்ஸ்‌ நாடுகளில்‌ அதிகளவில்‌ பரவி வருகிறது. இந்தியாவில்‌ ஒரிசா, குஜராத்‌ ஆகிய மாநிலங்களில் புதிய ஒமிக்ரான்‌ வைரஸ்‌ தொற்று உள்ளவர்கள்‌ கண்டறியப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வருவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே கோவை அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி ஆகிய இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்தால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

இதையும் படிங்க : கொரோனா பரவல் - கோவை மாவட்டத்தில் தயார் நிலையில் 6,400 படுக்கைகள்

இந்த பயிற்சியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் முறையை செய்து பயிற்சி பெற்றனர். இந்த மாதிரி பயிற்சியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பார்வையிட்டார். மேலும், சிகிச்சைக்கான உபகரணங்களை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும், அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சைக்கான வார்டில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சுகாதாரத்துறை இணை இயக்குநர் அருணா, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர் : சவுந்தர் மோகன் - கோயம்புத்தூர்

First published:

Tags: Coimbatore, Local News