இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு ஏற்படுவது என்பது மிகவும் சாதரான விஷயமாக மாறியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். மனக்கவலை, பதற்றம், வாழ்வியல் முறையில் மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே மாரடைப்பு ஏற்பட்டவர்களை பத்திரமாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்த பயிற்சிப் பட்டறையை கோவை பத்திரிகையாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பேரிடர் மேலாண்மை நிபுணரும், ஃபர்ஸ்ட் ஹார்ட் பவுண்டேசனின் நிறுவனருமான சரவணன் மற்றும் அவரது குழுவினர் கலந்து கொண்டு மாரடைப்பு ஏற்பட்டவர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு இதயம் நின்று போனவர்களுக்கு சி.பி.ஆர் (CPR - cardiopulmonary resuscitation) கொடுக்கும் வழிமுறைகளை விளக்கினார்.
இதுகுறித்து பேசிய சரவணன், மாரடைப்பு ஏற்பட்ட ஒருவரை நிற்க வைக்கவோ, நடக்க வைக்கவோ அல்லது படுக்க வைக்கவோ கூடாது. அவரை 'W' வடிவில் அமர வைக்க வேண்டும். அதிகமாக மூச்சுவிடுவதையும், சத்தமாக இருமுவதையும் உறுதி செய்ய வேண்டும். இதனிடையே Ecosprin, Sorbitrate என்ற மாத்திரைகளுள் ஒன்றை பொடியாகவோ அல்லது முழுதாகவோ நாக்கின் அடியில் வைக்க வேண்டும். தண்ணீர் கொடுக்க வேண்டாம். இது தான் முதலுதவியாக இருக்க முடியும். முதலுதவி முடிந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டால் வாயு தொல்லை என்று நினைக்க வேண்டாம். இதுபோன்ற தொல்லைகள் ஏற்பட்டால் அதனை இதயம் தொடர்பான பிரச்சனை என்று கருதி மருத்துவமனைக்கு செல்லுங்கள்.
மூச்சு இல்லாமல் நாடி இல்லாமல் கீழே விழும் நிலை ஏற்பட்டால் உடனடியாக சி.பி.ஆர் கொடுக்க வேண்டும். நின்றுபோன இதயத்தையும் நுரையீரலையும் மீண்டும் செயல்பட வைக்கும் முறையே இது. நமது கைகளால் பாதிக்கப்பட்டவரின் இதயம் உள்ள பகுதியை 2 இன்ச் அளவுக்கு அழுத்தம் கொடுத்து சி.பி.ஆர் கொடுக்க வேண்டும். நொடிக்கு ஒருமுறை அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Heart attack, Local News