முகப்பு /கோயம்புத்தூர் /

கோடை காலத்தில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது? கோவை கல்லூரி மாணவர்களுக்கு செயல் விளக்கம்..

கோடை காலத்தில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது? கோவை கல்லூரி மாணவர்களுக்கு செயல் விளக்கம்..

X
மாதிரி

மாதிரி படம்

Coimbatore News | கோடை காலம் தொடங்கியதை தொடர்ந்து, தீ விபத்து ஏற்பட்டால் அதனை கையாள்வது மற்றும் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தீயணைப்புத்துறை சார்பில் கோவை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோடை காலங்களில் தீயணைப்பு துறை சார்பில் பல்வேறு இடங்களில் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கோவை அரசு கலைக்கல்லூரியில் கோவை தெற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தீயணைப்பு துறை அதிகாரிகள் சிவராஜ், செல்வ மோகன், முருகையன் ஆகியோர் முன்னிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து செய்து காண்பித்தனர்.

இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் பயன்படுத்தும் தீ தடுப்பு கருவிகள், தீ அணைப்பான் கருவிகளை உபயோகிக்கும் முறை, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது, தீயை கட்டுப்படுத்தும் முறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை குறித்து செய்து காண்பித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க : பீடி பிடித்து வீசியதால் ஏற்பட்ட காட்டுத்தீ.. சந்தனமர கடத்தலில் சிக்கிய பீடி ஆசாமி!

தீயணைப்பு வாகனங்களில் இருந்து நீரை வெளியேற்றும் முறைகள், ஒரு இடத்தில் தீப்பிடித்தால் ஈர சாக்குகளை கொண்டு தீயை அணைக்கும் முறை உள்ளிட்டவற்றை தீயணைப்புத்துறையினர் மாணவர்களுக்கு செய்து காட்டினர். இந்நிகழ்வில் கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் உலகி, கல்லூரி பேராசிரியர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Coimbatore, Local News