ஹோம் /கோயம்புத்தூர் /

வருமான வரிச்சலுகை யாரெல்லாம் பெற முடியும்..? கோவையில் வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம்

வருமான வரிச்சலுகை யாரெல்லாம் பெற முடியும்..? கோவையில் வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம்

கலந்துரையாடல்

கலந்துரையாடல் கூட்டம்

Coimbatore District News : பயன்களை பெறுவது எப்படி? வருமான வரித்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்துரையாடல்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் வருமான வரித்துறையினர் அறக்கட்டளைகள் நடத்தி வருபவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினர்.

அறக்கட்டளைகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருமான வரித்துறையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே வருமான வரித்துறை அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அறக்கட்டளை நடத்துவோரின் கலந்துரையாட கூட்டம் இந்திய தொழில் வர்த்தக சபையில் நடைபெற்றது.

வருமான வரித்துறை ஆணையர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துறையாடல் கூட்டத்தில் வரி செலுத்துவதில் உள்ள சிக்கல்கள், கிடைக்கும் பயன்கள் தொடர்பாக அதிகாரிகள் உரையாடினர்.

இதையும் படிங்க : கோவைக்கு ஒரு விழா எடுக்குறாங்க... தகவல் தெரிஞ்சுக்க முழுசா படிங்க..

தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் வரி மற்றும் வருமான வரித்துறையில் பதிவு செய்வது தொடர்பான தங்களது சந்தேகங்களை எழுப்பினர்.

இதுகுறித்து வருமான வரித்துறை ஆணையர் ரத்தினசாமி கூறுகையில், இந்த கூட்டத்தில் வரிசெலுத்துவோறுக்கு அரசின் அணுகுமுறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறினார். மேலும், வரிச்சலுகை பெறுவதற்காக அறக்கட்டளை நடத்துவோர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவு செய்வது அவசியம் என்றும், 25ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும் வருமான வரித்துறை ஆணையர்தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News