Home /coimbatore /

கோவை ரேஸ்கோர்ஸ்-ல் என்ன வசதிகள் தேவை? - மக்கள் கூறுவதை கேளுங்க..

கோவை ரேஸ்கோர்ஸ்-ல் என்ன வசதிகள் தேவை? - மக்கள் கூறுவதை கேளுங்க..

கோவை

கோவை ரேஸ்கோர்ஸ்

Coimbatore Race Course : கோவையில் ரேஸ்கோர்ஸ் என்பது என்பது ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது. இப்பகுதியில் மேலும் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று கோவை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
கோவையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அது எவ்வாறு அமைய வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோவையில் ரேஸ்கோர்ஸ் என்பது என்பது ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது. இந்த பகுதியைச் சுற்றிலும் தான் ஆட்சியர் முதல் அனைத்து தரப்பு அரசு அதிகாரிகள் வரை வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதன்படி , ரேஸ்கோர்ஸ் பகுதியில்  நடைபாதைகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சிறார்களுக்கான விளையாட்டு இடங்கள், உடற்பயிற்சி செய்வோருக்கான  வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவை ரேஸ்கோர்ஸ்


ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து ரெட் பீல்ட்ஸ் செல்லும் சாலையில் பிரம்மாண்டமாக கோப்பை வடிவிலான மின் விளக்கும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் சுமார் ரூ.40 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

கோவை ரேஸ்கோர்ஸ்


கோவை மாநகரில் உள்ள மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள சிறந்த இடமாக ரேஸ்கோர்ஸ் பகுதியை கருதுகின்றனர். இதனிடையே இப்பகுதியில் மேலும் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று கோவை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி செய்யும் இடங்களில் கழிப்பறை வசதி, தரமான சாலைகள், நடைபயிற்சி செல்வோர் இளைப்பாற ஆங்காங்கே இருக்கைகள், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் சிசிடிவி காமிரக்கள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி