முகப்பு /கோயம்புத்தூர் /

பெண்களுக்கு பாதுகாப்பான நகரமா கோவை? - வெளியூர் பெண்களின் கருத்து இதுதான்...

பெண்களுக்கு பாதுகாப்பான நகரமா கோவை? - வெளியூர் பெண்களின் கருத்து இதுதான்...

X
கோவையில்

கோவையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து கருத்து

Coimbatore - Women Safety | வெளியூர்களில் இருந்து இங்கு வந்து தங்கியிருந்தாலும் கோவை எங்கள் சொந்த ஊரைப் போன்ற சூழலைக் கொடுக்கிறது என்கின்றனர் வெளியூர்களிலிருந்து கல்விக்காகவும், வேலை நிமித்தமாகவும் கோவைக்கு வந்துள்ள பெண்கள்..

  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையில் பெண்கள் பாதுகாப்பு எந்த அளவில் உள்ளது என்பது குறித்து கோவையில் படித்து வரும் இளம் பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஒரு தொழில் மாவட்டமாகும். இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் இதனால் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.

இது மட்டுமல்லாது கோவையில் ஏராளமான பள்ளிகள் கல்லூரிகள் உள்ளன. இதனால் கோவை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் இங்கு கல்வி கற்க வருகின்றனர்.

மேலும் படிக்க:  திருச்சி பொன்மலையில் உருவாக்கப்பட்ட ஊட்டி மலைப்பாதை ரயில் என்ஜின் - சிறப்புகள் என்ன?

இதனிடையே கோவையில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பது குறித்து பெண்களிடம் கருத்துக் கேட்டோம்.

அதற்கு பெண்கள் கூறுகையில், "வெளியூர்களில் இருந்து இங்கு வந்து தங்கியிருந்தாலும் கோவை எங்கள் சொந்த ஊரைப் போன்ற சூழலைக் கொடுக்கிறது. இங்குள்ள மக்கள் அன்பாக இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் கோவை மக்களை உதவிக்கு அழைக்க முடியும். தனியாக பயணிப்பது குறித்த அச்சம் எங்களுக்கு இல்லை. மேலும், காவல்துறையினர் இங்கு பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளனர்.\" என்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Coimbatore, Local News, Women safety