கோவை மாநகரில் நடத்தப்பட்ட ஆய்வில் 1 லட்சத்து 11 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 13 சதவீதம் தெரு நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு வீதிகளிலும் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன. இவை சாலைகளில் வாகனங்களில் செல்வோரை அவ்வப்போது துரத்துவதால் பதற்றமடையும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயமடைகின்றனர்.
சில தெரு நாய்கள் விதிகளில் விளையாடும் குழந்தைகளையும் கடித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் தெரு நாய்கள் தொல்லையால் கோவை மாநகரில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த சூழலில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை மாநகராட்சி மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தினர் இணைந்து மாநகரில் உள்ள தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணியினை கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கினர். 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்து இந்த கணக்கெடுப்பை நடத்திய நிலையில் மாநகரில் உள்ள 5 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 74 தெரு நாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் இவற்றில் 9 முதல் 13 சதவீதம் தெரு நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்திருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது. கோவையில் உக்கடம், சீரநாயக்கன்பாளையம் மற்றும் ஒண்டிப்புதூர் ஆகிய மூன்று இடங்களில் தெரு நாய்கள் கருத்தடை மையம் செயல்பட்டு வரும் நிலையிலும் வெறும் 13 சதவீத நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டிருப்பது ஏன் என்றும், உடனடியாக தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியை முழு வீச்சில் மேற்கொண்டு மக்களின் அச்சத்தை போக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News