ஹோம் /கோயம்புத்தூர் /

வீட்டில் சமைத்த உணவை ஆன்லைனில் விற்பனை செய்யும் இல்லத்தரசி.. கோவையில் சுவாரஸ்யம்!

வீட்டில் சமைத்த உணவை ஆன்லைனில் விற்பனை செய்யும் இல்லத்தரசி.. கோவையில் சுவாரஸ்யம்!

X
இல்லத்தரசி

இல்லத்தரசி பிரியா

குக்கர் என்ற செயலி மூலம் உணவை டெலிவரி செய்து லாபம் ஈட்டி வருகிறார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையில் தொடங்கப்பட்ட புதிய செயலியை பயன்படுத்தி கோவையைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் அவர் தயாரிக்கும் உணவுகளை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகிறார்.

இன்றைய காலகட்டத்தில் சில நிமிடங்களில் நமக்கு வேண்டிய உணவுகள் நம் வீடு தேடி வர தொடங்கி விட்டன. வெளியூர்களில் பணிக்கு செல்லும் இளைஞர்கள் பலரும் உணவு 'டெலிவரி' செய்யும் செயலிகள் மூலம் வித விதமான உணவுகளை ஆர்டர் செய்து ருசிக்கின்றனர்.

ஆனால், ஒவ்வொரு முறை ஹோட்டல் உணவை சாப்பிடும் போதும் "என்னதான் இருந்தாலும் வீட்டு சமையலைப் போல் வராது" என்று முணு முணுக்காத ஆட்கள் கிடையாது. இதனிடையே கோவையில் தொடங்கப்பட்டுள்ள புதிய செயலி வேலைக்கு செல்லாத ஆண்கள், பெண்கள் வீட்டு முறைப்படி சமைக்கும் உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு 'டெலிவரி' செய்து வருகிறது.

கோவையை மையமாக வைத்து தொடங்கப்பட்ட 'குக்கர்' என்ற செயலி மூலமாக வீட்டில் சமைத்த உணவை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகிறார் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற இல்லத்தரசி.

இவர் தயாரிக்கும் உணவு வகைகளுக்கு இவரே விலையை நிர்ணயம் செய்து, அதனை செயலியில் பதிவிடுகிறார். குக்கர் செயலியின் 'டெலிவரி பார்ட்னர்கள்' அந்த உணவை எடுத்து வாடிக்கையாளர்களிடம் சேர்க்கின்றனர்.

இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே தொழிலை லாபகரமாக நடத்த முடிகிறது என்கிறார்பிரியா.

First published:

Tags: Coimbatore, Job, Local News, Work From Home