ஹோம் /கோயம்புத்தூர் /

வறுமையை கடந்து பவர் லிப்டிங்கில் மாநில அளவில் பதக்கங்களை வென்ற தாய்.. மகள்..!

வறுமையை கடந்து பவர் லிப்டிங்கில் மாநில அளவில் பதக்கங்களை வென்ற தாய்.. மகள்..!

கோவை

கோவை

Coimbatore Sports Persons | வறுமை சாதிக்க தடையே இல்லை.. பவர் லிப்டிங்கில் பதக்கங்களை வென்ற தாய்.. மகள்..!

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையில் வீட்டு வேலைக்குச் செல்லும் பெண் ஒருவர் தனது முதலாளியின் அறிவுரையைக் கேட்டு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றதுடன், பவர் லிப்டிங் பயிற்சியும் பெற்றுள்ளார். தான் மட்டுமல்லாது தனது மகளையும் பவர் லிப்டிங் பயிற்சி பெறச் செய்துள்ளார்.

இதன் மூலமாக மாநில அளவிலான பவர் லிப்டிங் போட்டியில் 63 கிலோ எடைப் பிரிவில் தாய் தங்கப் பதக்கமும், மகள் 47 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கமும் பெற்று வெற்றி பெற்று சாதிக்க வறுமை தடையே இல்லை என்று நிரூபித்துள்ளனர்.

கோவை அறிவொளி நகர் பகுதியில் வசிப்பவர் மாசிலாமணி. 5-ஆம் வகுப்பு மட்டுமே படித்த இவருக்கு திருமணமாகி 2 பெண்குழந்தைகள் உள்ளனர். மேலும் ஒரு பெண் குழந்தையை தனது ஆதரவில் வளர்த்து வருகிறார். இவரது கணவர் ஒரு கூலித்தொழிலாளி. வாழ்வாதாரத்திற்காக அவ்வப்போது கிடைக்கும் வேலையை செய்து வருகிறார்.

மேலும் படிக்க:  திருச்சியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள்...! இங்கு இவ்வளவு சிறப்புகளா...!

ஆரம்ப காலகட்டத்தில் தூய்மைப்பணியாளராக பணிபுரிந்து வந்த மாசிலாமணி, கடந்த சில ஆண்டுகளாக வீட்டு வேலைக்கு செல்ல துவங்கியுள்ளார்.

மகளுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள தாய் மாசிலாமணி

கோவைப்புதூரில், உள்ள பூர்ணிமா என்பவரின் வீட்டில் பணிபுரிந்து வந்த மாசிலாமணியிடம், \"நீங்கள் உடற்பயிற்சி செய்து உடம்பை குறைக்கலாமே\" என்று பூர்ணிமா கேட்டுள்ளார். ஆனால், மாதம் 4 ஆயிரம் ரூபாய் மட்டும் வருவாய் ஈட்டும் மாசிலாமணிக்கு உடற்பயிற்சி கூடத்திற்கான கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை.

மேலும் படிக்க: வால்பாறைக்கு சுற்றுலா போறீங்களா? உஷார்... வனத்துறை எச்சரிக்கை.!

இதனைத் தொடர்ந்து 6 மாத கட்டணத்தை பூர்ணிமாவே செலுத்தி அவரை உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு மற்றவர்கள் பவர் லிப்டிங் செய்வதைப் பார்த்து, தானும் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மாசிலாமணிக்கு ஏற்பட்டுள்ளது.

மகளுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள தாய் மாசிலாமணி

தொடர்ந்து பயிற்சியாளர் சிவக்குமாரிடம் தனது ஆர்வத்தைக் கூற அவரும் மாசிலாமணிக்கு பவர் லிப்டிங் பயிற்சி அளித்துள்ளார்.

மேலும் படிக்க:  திருச்சி பொன்மலையில் உருவாக்கப்பட்ட ஊட்டி மலை  ரயில் என்ஜின் - சிறப்புகள் என்ன?

மாசிலாமணியைப் பார்த்த அவரது 11ம் வகுப்பு படிக்கும் தாரணிக்கும் பவர் லிப்டிங் மீது ஆர்வம் ஏற்பட்டது. இருவரும் தீவிர பயிற்சி எடுத்து வந்த நிலையில், திருச்சியில் மாநில அளவிலான பவர் லிப்டிங் போட்டி நடைபெற்றது. இதில் 63 கிலோ எடைப் பிரிவில் மாசிலாமணி தங்கப்பதக்கமும், மகள் தாரணி 47 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்று வெற்றி பெற்றனர்.

பவர் லிஃப்டிங்கில் சாதனை

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனையடுத்து சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான பவர் லிப்டிங் போட்டியில் கலந்துகொள்ள இருவரும் தேர்வாகியுள்ளனர்.

பவர் லிப்டிங் செய்வதற்கு தேவையான உபகரணங்கள், முறையான உணவு, போதிய வசதி இல்லாமல் இருந்தாலும், சாதனை படைக்க வறுமை ஒரு தடை இல்லை என்று நிரூபித்துள்ளது இந்த தாய் மகள் கூட்டணி.

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News