ஹோம் /கோயம்புத்தூர் /

ஏடிஎம்-ல் தவறவிட்ட ரூ.10,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கோவை போலீஸ் கான்ஸ்டபிளின் நேர்மைக்கு குவியும் பாராட்டு..

ஏடிஎம்-ல் தவறவிட்ட ரூ.10,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கோவை போலீஸ் கான்ஸ்டபிளின் நேர்மைக்கு குவியும் பாராட்டு..

கோவை

கோவை போலீஸ் கான்ஸ்டபிளின் நேர்மைக்கு குவியும் பாராட்டு..

Coimbatore News | கோவையில் ஏ.டி.எம் மையத்தில் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச்சென்ற 10,000 ரூபாய் பணத்தை, உரியவரிடம் சேர்த்த காவலர் கோவிந்தனின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தன். முன்னாள் ராணுவ வீரரான இவர் 21 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்தார். ராணுவத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற பிறகு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே கோவிந்தன் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள SBI (எஸ்.பி.ஐ)  ஏ.டி.எம் மையத்திற்குச் சென்றார். அப்போது வங்கி வாடிக்கையாளர் ஒருவர் தான் எடுக்க நினைத்த 10,000 ரூபாய் பணத்தை ஏ.டி.எம் இயந்திரத்திலேயே விட்டுச் சென்றது கோவிந்தனுக்கு தெரியவந்தது.

தொடர்ந்து அந்த பணத்தை எடுத்த கோவிந்தன் அருகில் இருந்த எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்றார். பணம் மீட்கப்பட்டது தொடர்பாக வங்கி மேலாளருக்கு தகவல் கொடுத்து, அந்த நேரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க முயன்றது யார்? என்பதை அறிந்து கொண்டார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரை வங்கிக்கு வரவழைத்து, விசாரித்த பின்னர் அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்.

உரியவரிடம் பணத்தை ஒப்படைத்த போலீஸ் கான்ஸ்டபிள் கோவிந்தன்

காவலரின் இந்த செயலை வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாராட்டினர்.சிறுவயதில் இருந்தே நேர்மையாக இருப்பதன் அவசியத்தை பெற்றோர்கள் தனக்கு புகட்டியதாகவும், மேலும்பணத்தை மீட்டு கொடுத்ததற்குகுவியும் வாழ்த்துக்கள் தான் மீண்டும் சிறப்பாக பணியாற்ற உத்வேகம் அளிப்பதாக காவலர் கோவிந்தன் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News