Home /coimbatore /

கோவையின் ரிச்சி தெரு.. கடலைக்கார சந்துக்குள் சென்றால் காலி தான்..! தீர்வு எப்போது.?

கோவையின் ரிச்சி தெரு.. கடலைக்கார சந்துக்குள் சென்றால் காலி தான்..! தீர்வு எப்போது.?

கோவை

கோவை கடலைக்கார சந்து

Coimbatore City News : கோவையின் மையப்பகுதியில் அமைந்துள்ள கடலைக்கார சந்து  பகுதியில் முறையற்ற வகையில் இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
கோவை மாநகரில் அவினாசி சாலை மேம்பாலம் ஒரு முக்கியமான மேம்பாலமாக உள்ளது. இந்த பகுதியில் இருந்து கோவையின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல முடியும். இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது தான் கடலைக்கார சந்து. கே.கே. லேன் என்றும் இந்த பகுதி அழைக்கப்படுகிறது.

இந்த பகுதிக்கு அருகிலேயே தனியார் பள்ளி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம் காவல் ஆணையர் மற்றும் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் என பல அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடலைக்கார சந்து பகுதி முழுவதும் எலெக்ட்ரிகல் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் உள்ளன. சென்னையின்  ரிச்சி ஸ்ட்ரீட்டை நினைவுபடுத்தும் இந்த குறுகலான பகுதிக்கு கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த சில்லறை வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து எலெக்ட்ரிகல் பொருட்களை வாங்கிச்செல்வது வழக்கம்.

இதையும் படிங்க:  குறைந்த கட்டணத்தில் வீட்டுக்கே வந்து கார் வாஷ்.. கோவையில் அசத்தல் சேவை..

இந்த நிலையில், குறுகலான இடத்தில் கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை முறையில்லாமல் பார்க்கிங் செய்வதால் அவ்வழியாக செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்த பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் கூட பார்க்கிங் வசதி செய்யப்படுவதில்லை என்றும், பல ஆண்டுகளாக பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இங்கு மாநகராட்சியின் பார்க்கிங் உள்ளது. ஆனால் கார்கள் மட்டுமே அங்கு நிறுத்த அனுமதிக்கப்படுகிறது. இதனிடையே அப்பகுதியில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதை சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் கவனித்து வாகன நெரிசலால் ஏற்படும் சிக்கலை விரைந்து தீர்க்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி