முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை... தேங்கிய மழைநீரால் லங்கா கார்னரில் போக்குவரத்து பாதிப்பு

கோவையில் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை... தேங்கிய மழைநீரால் லங்கா கார்னரில் போக்குவரத்து பாதிப்பு

X
மழைநீரில்

மழைநீரில் சிக்கிய ஆட்டோ

கோவையில் கடந்த ஒரு சில தினங்களாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. கடந்த ஒருவாரமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு சில தினங்களாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே இன்று (புதன்கிழமை) கோவையில் பீளமேடு, சிங்காநல்லூர், காந்திபுரம், ராமநாதபுரம், லட்சுமி மில்ஸ், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

சுரங்கப்பாதையில் சிக்கிய ஆட்டோ

கோவையில் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதெல்லாம் மேம்பாலங்களின் அடியில் மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதையறியாமல் அவ்வழியாக வரும் வாகனங்கள் மழை நீரில் சிக்கி நின்று விடும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, கோவையின் மையப்பகுதியில் அமைந்துள்ள லங்கா கார்னர் ரயில்வே மேம்பாலத்தின் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி நின்றது.

வாகன நெரிசல்

top videos

    இந்நிலையில் அந்த சுரங்கப்பாதை வழியாக பயணிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ ஒன்று தேங்கிய மழை நீரில் சிக்கி பழுதாகி நின்றது. இதையடுத்து ஆட்டோவிலிருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு, ஆட்டோ மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தேங்கிய மழைநீரால் சிறிய மற்றும் இலகு ரக வாகனங்கள் சுரங்கப்பாதையை கடந்து செல்லமுடியாத நிலையில்,  வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    First published:

    Tags: Coimbatore, Local News