Home /coimbatore /

உக்கடம், சிங்காநல்லூர் உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை 

உக்கடம், சிங்காநல்லூர் உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை 

கோவையில்

கோவையில் மழை

Coimbatore Rains | கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று சுமார் இரண்டு மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், மாநகரில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக கோவையில் மேம்பாலங்களின் கீழ் பகுதியில் மழை வெள்ளம் தேங்கி அவ்வழியாக சென்ற வாகனங்கள் நீரில் சிக்கிக்கொண்டன.

இந்த சூழலில், கோவை மாநகரில் இன்று பல்வேறு பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கோவை காந்திபுரம், பீளமேடு, ரயில்நிலையம், உக்கடம் மற்றும் சிங்காநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பிய மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Heavy rain, Local News

அடுத்த செய்தி