Home /coimbatore /

கோவையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்'... அப்படி என்னங்க இருக்கு? வாங்க பார்க்கலாம்..!

கோவையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்'... அப்படி என்னங்க இருக்கு? வாங்க பார்க்கலாம்..!

கோவையில்

கோவையில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்'..

Coimbatore Happy Street | கோவையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்று வந்த 'ஹேப்பி ஸ்ட்ரீட்' மீண்டும் துவங்கியுள்ளது கோவை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
கடந்த 2017ஆம் ஆண்டில் கோவை, மதுரை, சென்னை போன்ற பெருநகரங்களில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இந்த முயற்சியின் படி தனியார் நிறுவனத்துடன் மாவட்ட நிர்வாகங்கள், அரசுத் துறைகள் மற்றும் காவல்துறை இணைந்து ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை நடத்தின நடத்தப்பட்டது.

அதன்படி நகரின் குறிப்பிட்ட பகுதியில், ஞாயிற்றுக்கிழமையன்று காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை ஒரு சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் பொது மக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப நடனம் ஆடுவது, சைக்கிள் ஓட்டுவது, விளையாடுவது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடுவர்.

மக்களை மகிழ்விக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியானது கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. கொரோனா பெருந்தொற்றின் விளைவுகள் இப்போது குறைந்துள்ள நிலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் மீண்டும் துவங்கியுள்ளது.

இதையும் படிங்க:  மேம்பாலம் இல்லாததால் திக்குமுக்காடும் சிங்காநல்லூர்..

அதன்படி, கோவையில் ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள டி.பி சாலையில் தலைமை தபால் அலுவலகம் முதல் மேக்ரிகார் சாலை வரையான பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நேற்று (செப் 18) நடத்தப்பட்டது. நகரின் முக்கியமான சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு அங்கு பொதுமக்கள் விளையாடி மகிழ்ந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சைக்கிளிங், கிரிக்கெட், கால்பந்து, டென்னீஸ், ஆடல் பாடல் என அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் இந்த பகுதியில் அரங்கேறியது. கோவையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் மட்டுமல்லாது, சிங்காநல்லூர் சுற்றுவட்டாரத்திலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி