முகப்பு /கோயம்புத்தூர் /

சாலையில் டயர் ஓட்டி மகிழ்ந்த மக்கள்..! கோவையில் மீண்டும் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்..!

சாலையில் டயர் ஓட்டி மகிழ்ந்த மக்கள்..! கோவையில் மீண்டும் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்..!

X
கோவையில்

கோவையில் நடந்த ஹேப்பி ஸ்ட்ரீட்

Coimbatore Happy Street Celebration : கோவை மாநகராட்சி, காவல் துறை மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் இணைந்து ஞாயிற்றுக்கிழமைகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றதால் மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு பழங்கால விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர்.

கோவை மாநகராட்சி, காவல் துறை மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் இணைந்து ஞாயிற்றுக்கிழமைகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு பழங்கால விளையாட்டுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

கோவையில் நடந்த ஹேப்பி ஸ்ட்ரீட்

மேலும் இதில் ஓவியர்கள், நடன கலைஞர்கள் உள்ளிட்டோரும் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆர்.எஸ்.புரம் பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பழங்கால விளையாட்டுக்களான பம்பரம், கோலி குண்டு, டயர் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை மகிழ்ச்சியுடன் விளையாடினர். மேலும் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட்டில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன.

First published:

Tags: Coimbatore, Local News