Home /coimbatore /

கோவையில் 'சிருஷ்டி 2022' கைவினைப்பொருள் கண்காட்சி - என்ன ஸ்பெஷல்?

கோவையில் 'சிருஷ்டி 2022' கைவினைப்பொருள் கண்காட்சி - என்ன ஸ்பெஷல்?

கோவை

கோவை

Coimbatore District News | கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் நடத்தும் 'சிருஷ்டி 2022' என்ற கைவினைப்பொருட்கள் கண்காட்சி துவங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
கோவை நவஇந்தியா பகுதியில் தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் நடத்தும் 'சிருஷ்டி 2022' என்ற கைவினைப்பொருட்கள் கண்காட்சி துவங்கியுள்ளது.

தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் கடந்த 35 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது.

உலக கைவினை கவுன்சிலின் கீழ் இயங்கி வரும் சென்னையில் உள்ள இந்திய கைவினைபொருள் சங்கத்தின் அங்கீகாரத்துடன் இந்த கவுன்சில் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே 'சிருஷ்டி 2022' என்ற கைவினை பொருட்கள் கண்காட்சியை இந்த கவுன்சில் நடத்துகிறது. கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் நேற்று துவங்கிய இந்த கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள், வடிவமைப்புகள் மற்றும் கைவினை பொருட்களை உருவாக்கிய கலைஞர்களே நேரடியாக தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்கின்றனர்.

இதையும் படிங்க:  1,000 பேருக்கு வேலை.. கோவை டைடல் பார்க்ல தொடங்கியாச்சு Quintessence நிறுவனம்..

ஜவுளி பொருட்கள், ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள், குழந்தைகளுக்கும் மகளிருக்குமான அழகிய ஆடைகள், அரிய வகை கற்கள், வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் வாழ்வியல் முறை பொருட்கள் இங்கு விற்பனையாகின்றன.

இந்த கண்காட்சியில் மொத்தம் 58 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், உணவு வகைகளுக்கு என பிரத்தியேகமாக 12 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கண்காட்சியானது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. வரும் 17ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

suguna mandapam
கண்காட்சி நடைபெறும் சுகுணா திருமண மண்டபம் செல்வதற்கான வழி :
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி