முகப்பு /கோயம்புத்தூர் /

28 மாநிலங்களின் உணவுகள் ஒரே இடத்தில்..! கோவையில் பிரம்மாண்ட உணவுத்திருவிழா..!

28 மாநிலங்களின் உணவுகள் ஒரே இடத்தில்..! கோவையில் பிரம்மாண்ட உணவுத்திருவிழா..!

X
மாதிரி

மாதிரி படம்

Kovai Food Festival : கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன் கார்னிவல்’ என்ற பெயரில் பிரம்மாண்ட உணவு திருவிழா நடைபெற்றது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் நவக்கரை பகுதியில் ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் உணவக மேலாண்மை துறை மாணவர்கள் சார்பில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன் கார்னிவல்’ என்ற பெயரில் உணவு திருவிழா நடைபெற்றது.

இந்த உணவுத் திருவிழாவில் இந்தியாவின் 28 மாநிலங்களில் இருந்து சைவ மற்றும் அசைவ உணவுகளில் சுமார் 140 வகையான உணவு வகைகள், பானங்கள் மற்றும் இனிப்புகளும் பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டன. மேலும், ஆரோக்கிய உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மைக்ரோகிரீன்கள் மற்றும் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பல்வேறு உணவுகள் மற்றும் அது குறித்த பயன்களும் காட்சிப் படுத்தப்பட்டன.

உள்ளூர் பொதுமக்கள் மட்டுமல்லாது, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், வடமாநில தொழிலாளர்களும் இந்த உணவு திருவிழாவில் கலந்து கொண்டு தங்களது சொந்த ஊர் உணவு உண்டு மகிழ்ந்தனர். உணவுத்திருவிழாவின் ஒரு பகுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மாற்றும் பேஷன் ஷோ நடைபெற்றது.

கோவையில் பிரம்மாண்ட உணவுத்திருவிழா

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதுகுறித்து கல்லூரியின் தலைவர் அஜித்குமார் லால் கூறுகையில், “இந்திய நாட்டின் உணவு மற்றும் கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் இந்த திருவிழாவை கலாச்சார விழாவாக நடத்தி வருகிறோம்,” என்றார்.

    First published:

    Tags: Coimbatore, Food, Food18, Lifestyle, Local News