முகப்பு /கோயம்புத்தூர் /

அரசு பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியே இல்லை.. கோவை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு..

அரசு பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியே இல்லை.. கோவை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு..

X
மாதிரி

மாதிரி படம்

Govt schools in Coimbatore : கோவையில் 2 அரசு பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியே இல்லை என்றும், தமிழகத்தில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க வலியுறுத்தியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்த் தேசப் புரட்சி இயக்கத்தினர் மனு அளித்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாவட்ட அரசு பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியே இல்லை என்று ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்த்தேசப் புரட்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பா.தமிழரசன் தலைமையில் அந்த அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

தொடர்ந்து பா.தமிழரசன் கூறியதாவது, “கோவை ராஜ வீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், பேரூர் சாலை செல்வபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியிலும் தமிழ் வழியில் கல்வி கற்பிக்கப்படுவதில்லை. கோவை மாவட்டத்தின் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் உள்ளது. எனவே தமிழ் வழிக்கல்வி வகுப்புகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பின்லாந்து, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாட்டு மக்கள் அவர்களது தாய் மொழியிலேயே கல்வி கற்று வளர்ந்து வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் ஆங்கில வழிக்கல்வி மெல்ல மெல்ல புகுத்தப்பட்டு வருகிறது. தமிழ் வழிக்கல்வியை அளிக்க அரசு மறுத்து வருவது கண்டனத்துக்கு உரிய செயலாகும்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதன் விளைவாக மாணவர்கள் தமிழில் திறமை இல்லாதவர்களாக பள்ளிகளில் இருந்து வெளியேறும் நிலை உருவாகி வருகிறது. எனவே இந்தாண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழ் வழிக்கல்வியை உறுதிப்படுத்த வேண்டும். தமிழ் மொழிப்பாடம் மட்டுமே உள்ளது. வேறு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் தமிழ் வழிக்கல்வி வேண்டி போராடி வரும் நிலையில், தமிழகத்திலும் போராடும் நிலையை உருவாக்கக் கூடாது” இவ்வாறு அவர் கூறினார்.

    First published:

    Tags: Coimbatore, Local News