முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதியதால் பரபரப்பு

கோவையில் பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதியதால் பரபரப்பு

X
விபத்துள்ளான

விபத்துள்ளான பள்ளி வாகனம்

Coimbatore | கோவையில் பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு சொந்தமான மாணவர்களை ஏற்றி செல்லும் வேன் காலையில் பள்ளியில் மாணவர்களை இறக்கி விட்டு பெட்ரோல் நிரப்புவதற்காக கல்லாங்காடுபுதூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்று கொண்டிருந்தது.

பெட்ரோல் நிரப்புவதற்காக சாலையில் இருந்து இடதுபுறமாக திரும்பும் போது பின்னால் கோவையில் இருந்து வால்பாறை நோக்கி வந்த அரசு பேருந்து பள்ளி வேனின் பின்புறம் மோதியது.

விபத்துக்குள்ளான பேருந்து

இந்த விபத்தில் பள்ளி வேன் சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. இதில் அரசு பேருந்தின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. பள்ளி வேனில் மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அரசு பேருந்தில் இருந்த பயணிகளும் காயமின்றி தப்பினர். இந்த விபத்தால் பொள்ளாச்சி கோவை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவத்துக்கு வந்த கிணத்துக்கடவு காவல்துறையினர் விபத்துக்கு உண்டான வாகனங்களை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Coimbatore, Local News