கோவையில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையின் போது அரசு பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டிலும் அரசு பொருட்காட்சி துவங்கியுள்ளது. இந்த பொருட்காட்சியை கடந்த 13ம் தேதி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.
அடுத்த 45 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த பொருட்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 15 ரூபாயும்,குழந்தைகளுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
இப்பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை உட்பட 27 அரசுத் துறைகளும் தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைத்துள்ளன.
மேலும், மாலை நேரத்தில் சூடாக சாப்பிட உணவுகள், குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எது எடுத்தாலும் 5 ரூபாய் 10 ரூபாய் என நாம் குழந்தை பருவத்தில் பார்த்து வியந்தது போன்ற கடைகளும் இந்த பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன.
ராட்டினங்கள் உட்பட அனைத்து விளையாட்டு அம்சங்களும் விலை அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கான ராட்டினங்கள் விளையாட நபர் ஒருவருக்கு 80 ரூபாயும், பெரியவர்களுக்கான ராட்டினங்கள் விளையாட நபர் ஒருவருக்கு 100 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்துடன் அரசு பொருட்காட்சிக்கு செல்ல வேண்டும் என்றால் 1500 ரூபாய் முதல் 2000 வரை தேவைப்படுகிறது."இங்கு செல்வதற்கு பதிலாக குடும்பத்துடன் ஊட்டி சென்றுவிட்டு வந்துவிடலாம் போல் உள்ளது" என்கின்றனர் பொதுமக்கள்
ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பொழுதை கழிக்க ஏற்ற இடமாக இல்லாமல் இந்தாண்டு பொருட்காட்சி மிகவும் 'காஸ்ட்லி' ஆக இருப்பதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News