ஹோம் /கோயம்புத்தூர் /

குறைந்த கட்டணத்தில் வீட்டுக்கே வந்து கார் வாஷ்.. கோவையில் அசத்தல் சேவை..

குறைந்த கட்டணத்தில் வீட்டுக்கே வந்து கார் வாஷ்.. கோவையில் அசத்தல் சேவை..

X
glint

glint Car Wash, கோவை

Glint Car Wash at Coimbatore : வீடு தேடிச்சென்று கார் வாஷ் செய்து தரும் பணியை செய்து வரும்  ‘கிளெண்ட் இந்தியா’  நிறுவனம் கோவையில் தனது சேவையை துவங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னையை மையமாக கொண்டு கிளெண்ட் (Glint) இந்தியா  நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கார்களை உரிமையாளர்களின் இடத்திற்கே சென்று சுத்தம் செய்து கொடுக்கும் பணியை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தார் கோவையில் தங்கள் சேவையை துவங்கியுள்ளனர்.

ஒரு காரை சுத்தம் செய்ய 7 முதல் 8 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும் சூழலில் இந்த நிறுவனத்தினர் வெறும் 200 மில்லி லிட்டர் தண்ணீரில் காரை சுத்திகரிக்க முடியும் என்கின்றனர். கார் இருக்கும் இடத்திற்கே வந்து சுத்தம் செய்து கொடுக்க முடியும் என்றும் காலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை இந்த சேவையை வழங்க உள்ளதாகவும் நிறுவனத்தார் தெரிவிக்கின்றனர்.

Glint கார் வாஷ்

மாதத்திற்கு ரூ.699 என்ற கட்டணத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீட்டிற்கே வந்து கார்களை சுத்தம் செய்து தருகிறார்கள் இந்த நிறுவனத்தினர்.

Glint கார் வாஷ்

ஸ்விக்கி, சொமேட்டோ நிறுவனங்களில் பணிக்கு சேர்வதைப்போல் கிளெண்ட் நிறுவனத்திலும் பணிக்கு சேர முடியும் என்றும் முதற்கட்டமாக ஆயிரம் பேர் வரை பணிக்கு எடுக்க இந்த நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Glint கார் வாஷ்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வீட்டுக்கே வந்து கார் சுத்தம் செய்து தரும் சேவையை பெற விரும்பினாலோ அல்லது கூடுதல் தகவல்களுக்கு 9384016215 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..

First published:

Tags: Automobile, Car, Coimbatore, Local News