முகப்பு /கோயம்புத்தூர் /

குறைந்த செலவில் கோடைகால நீச்சல் பயிற்சி.. கோவையில் எங்கு நடக்கிறது தெரியுமா?

குறைந்த செலவில் கோடைகால நீச்சல் பயிற்சி.. கோவையில் எங்கு நடக்கிறது தெரியுமா?

X
மாதிரி

மாதிரி படம்

Swimming Training At Kovai : கோவையில் குறைந்த கட்டணத்தில் நீச்சல் ஆர்வம் உள்ளவர்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் காந்தி பார்க் பகுதியில் மாநகராட்சி நீச்சல் குளம் செயல்பட்டு வருகிறது. பராமரிப்பில் தனியார் நீச்சல் குளங்களை மிஞ்சும் அளவிற்கு தூய்மையாக உள்ள இந்த நீச்சல் குளத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் நீச்சல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

25 மீட்டர் நீலம் மற்றும் 13 மீட்டர் நீளம் கொண்ட இந்த நீச்சல் குளத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நாட்களில் நீர் மாற்றப்படுகிறது. அன்றைய தினம் நீச்சல் குளத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. நீச்சல் பயிற்சி வழங்குவதற்காக இங்கு மூன்று பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு லைஃப் கார்டு நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒரு முறை நீச்சல் போட 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது தவிர மாதாந்திர பயிற்சிக்கு 1500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நீச்சல் பயிற்சியாளர் ரகு கூறியதாவது, ”இங்கு 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீச்சல் பயிற்சிக்கு வருகின்றனர். இவர்கள் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள். காலை 5.30 மணி முதல் 7.30 வரை அட்வான்ஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. பேசிக் பயிற்சி காலை 7.30 மணி முதல் 8.30 வரையும், பெண்களுக்கு என காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரையும், பொதுமக்களுக்கு காலை 9.30 மணி முதல் முதல் மாலை 4.30 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. முறையாக நீச்சல் பயிற்சி பெற்றவர்களை தவிர மற்றவர்களுக்கு டைவ் செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை.

கோவை மாநகராட்சி நீச்சல் குளம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    தற்போது கோடைகால முகாம் துவங்கியுள்ளது. இதற்கு 15 நாட்களுக்கு 2500 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கோடைகால முகாமில் ஃப்ரீ ஸ்டைல் என்ற நீச்சல் முறையை கற்றுக் கொடுக்கிறோம். கோவையில் குழந்தைகள் பலரும் நீச்சல் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதோடு, மாநில தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று வருகின்றனர். குழந்தைகளால் மிகவும் எளிதாக கற்றுக்கொள்ளக்கூடிய விளையாட்டு நீச்சல். இதில் முழு உடலும் வேலை செய்யும். ஒவ்வொருவரும் நீச்சல் பயிற்சி பெற்றிருப்பது அவசியம்,” இவ்வாறு அவர் கூறினார்.

    First published:

    Tags: Coimbatore, Local News