முகப்பு /கோயம்புத்தூர் /

குறும்படம் முதல் மேக்-அப் வரை.. அனைத்து போட்டியிலும் அசத்திய கோவை மாணவர்கள்!

குறும்படம் முதல் மேக்-அப் வரை.. அனைத்து போட்டியிலும் அசத்திய கோவை மாணவர்கள்!

X
கோவை

கோவை மாணவர்கள்

Coimbatore News| கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் ”மேக்” விழா நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ஜே.டி. எஜுகேஷன் மேக் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களுக்கு அனிமேஷன், 3டி கிராபிக் டிசைனிங், வீடியோ கேம்ஸ் தயாரிப்பு உள்ளிட்ட மீடியா தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே மேக் மையம் சார்பில் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டோ, குறும்படம், சிறந்த ரீல்ஸ், நடனம், ஓவியம், மேக்-அப் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன

இதில் கோவையைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் தங்கள் படைப்புகளை சமர்ப்பித்து வந்த நிலையில், போட்டி முடிவுகள் அறிவிக்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக சின்னத்திரை புகழ் கோபிநாத் கலந்து கொண்டார். மேலும், ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி முடிவுகளை அறிவித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு வென்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 மற்றும் மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

First published:

Tags: Coimbatore, Local News