கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருபாசினி, இளங்கலை பட்டயபடிப்பு முடித்துள்ள இந்த பெண் தனது 8 வயதிலிருந்து மொழிகளை கற்றுக்கொள்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.
சிறுவயதிலேயே தமிழ்,ஆங்கிலம், ஹிந்தி என பல மொழிகளில் பேசி,எழுதி அசத்தியுள்ளார். இந்நிலையில் இவரின் ஆர்வத்தை உணர்ந்து கொண்ட பெற்றோர்கள் பல மொழிகளில் படிக்க உற்சாகத்தை தூண்டினர்.
இதனையடுத்து கிருபாசினி படிப்படியாக மொழிகளை படிக்க ஆர்வம் செலுத்தி கற்றுக்கொண்டு வந்துள்ளார்.மொழிகளை கற்றுக்கொள்வதற்காக பல மாநிலங்கள் ,நாடுகள் சென்று பயிற்சியை பெற்று வந்துள்ள இவர் ஒரு மொழியை முழுமையாக பேசும் அளவிற்கு கற்று கொள்ள 3 மாதங்களே ஆகும் என்கிறார்.
தற்போது வரை பல்வேறு மாநிலங்களின் மொழிகள், அந்நிய நாடுகளின் மொழிகள் என 15 மொழிகளை கற்றுக்கொண்டு, முழுமையாக பேசி, எழுதி அசத்தி காட்டினார்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிரதம், கன்னடம், மலையாளம், பெங்காலி, பிரெஞ்ச், ஜெர்மென், ஸ்பேனிஷ், இடாலியன், போர்ச்சுகீஸ், ஜப்பானீஸ், டர்கிஸ், அரபிக் ஆகிய மொழிகள் கிருபாசினிக்கு அத்துப்படி.
மேலும் இந்த பெண்மணி, மொழிகளை படிக்க விரும்பும் குழந்தைகளுக்கு இலவசமாக கற்று தருவதாகவும், தனது 30 வயதிற்குள் 20 மொழிகளை கற்றுகொண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க போகவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்தியாவில் அதிக மொழிகளை பேசும் திறன் கொண்டவர்கள் அதிகம் இருந்தாலும், 15 மொழிகளை முறையாக உச்சரித்து, எழுதி, படித்து அசத்தும் கோவை பெண்மணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classical Language, Coimbatore, Local News